காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று கேரளாவின் கோட்டயம் பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அவருக்கு கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். படம்: பிடிஐ

 
இந்தியா

கேரளாவில் பாஜக, மார்க்சிஸ்ட் இடையே ரகசிய கூட்டணி: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்: கேரளா​வில் பாஜக, மார்க்​சிஸ்ட் ரகசிய கூட்​டணி அமைத்​துள்ளன என்று காங்​கிரஸ் மூத்த தலை​வர் ராகுல் காந்தி குற்​றம் சாட்டி உள்​ளார்.

கேரளா​வில் வரும் 9-ம் தேதி சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற உள்​ளது. இந்த தேர்​தலில் மார்க்​சிஸ்ட் தலை​மையி​லான ஆளும் இடது ஜனநாயக முன்​னணி, காங்​கிரஸ் தலை​மையி​லான ஐக்​கிய ஜனநாயக முன்​னணி, பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயக கூட்​டணி இடையே மும்​முனை போட்டி நில​வு​கிறது.

          

தேர்​தல் நெருங்​கும் சூழலில் 3 அணி​களும் பிரச்​சா​ரத்தை தீவிரப்​படுத்தி உள்​ளன. காங்​கிரஸ் மூத்த தலை​வர் ராகுல் காந்தி இரு நாள் பயண​மாக நேற்று கேரளா​வுக்கு சென்​றார். பத்​தனம்​திட்​டா, புதுப்​பள்ளி உள்​ளிட்ட பகு​தி​களில் அவர் பிரச்​சா​ரம் செய்​தார்.

அப்​போது அவர் கூறிய​தாவது: கேரள சட்​டப்​பேர​வைத் தேர்​தலை ஒட்டி மார்க்​சிஸ்ட் கட்​சி​யும் பாஜக​வும் ரகசிய கூட்​ட​ணியை அமைத்​துள்​ளன. இந்த ரகசிய கூட்​ட​ணிக்​கும் காங்​கிரஸ் கூட்​ட​ணிக்​கும் இடையே நேரடி போட்டி நில​வு​கிறது. அரசி​யல் காழ்ப்​புணர்ச்சி காரண​மாக என் மீது 36 வழக்​கு​கள் தொடரப்​பட்டு உள்​ளன. என்​னிடம் 55 மணி நேரம் இடை​வி​டா​மல் விசா​ரணை நடத்​தப்​பட்​டது.

ஆனால் ஊழலில் திளைத்து வரும் மார்க்​சிஸ்ட் தலைமை மீது மத்​திய அரசு விசா​ரணை நடத்​த​வில்​லை. கேரள முதல்​வர் பின​ராயி விஜயனுக்கு மத்​திய அரசு எந்த வகை​யிலும் அழுத்​தம் கொடுக்​க​வில்​லை. சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் பல்​வேறு ஊழல்​கள் நடை​பெற்று உள்​ளன.

பிரதமர் நரேந்​திர மோடி பாலக்​காட்​டில் பிரச்​சா​ரம் செய்​த​போது சபரிமலை ஊழல் விவ​காரம் குறித்து ஒரு வார்த்​தைகூட பேச​வில்​லை. மார்க்​சிஸ்ட் கட்​சிக்​காக அவர் மவுனம் காக்​கிறார்.

மார்க்​சிஸ்ட் தலை​மையி​லான இடது ஜனநாயக முன்​னணி ஆட்​சி​யில் கேரளத்​தின் பொருளா​தா​ரம் பின்​னடைவை சந்​தித்து வரு​கிறது. ஆளும் மார்க்​சிஸ்ட் கட்சி தொழிலா​ளர்​களின் நலனுக்​காக போராடு​வ​தாக கூறுகிறது.

ஆனால் ரப்​பர் தோட்ட தொழிலா​ளர்​களின் நலன்​களில் மார்க்​சிஸ்ட் தலை​வர்​கள் துளி​யும் அக்​கறை செலுத்​த​வில்​லை. அதற்கு மாறாக ரப்​பர் தோட்ட முதலா​ளி​களின் நலனில் தீவிர அக்​கறை செலுத்தி வரு​கின்​றனர்.இவ்​வாறு அவர் பேசி​னார்​.

SCROLL FOR NEXT