இந்தியா

காங்கிரஸ் கட்சி இந்திய ஆன்மாவின் குரல்: 140-வது நிறுவன நாளில் ராகுல் காந்தி பெருமிதம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: காங்​கிரஸ் கட்​சி​யின் 140-வது நிறுவன நாள் நேற்று கொண்​டாடப்​பட்​டது. டெல்​லி​யில் உள்ள கட்​சி​ தலைமை அலு​வல​க​மான இந்​திரா பவனில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் தேசி​யத் தலை​வர் கார்​கே, மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

இதுகுறித்து ராகுல் காந்தி எக்ஸ் தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: காங்​கிரஸ் வெறும் கட்சி அல்ல. அது இந்​திய ஆன்​மா​வின் குரல். நலிவடைந்த, ஒடுக்​கப்​பட்ட மற்​றும் உழைப்​பாளி ஒவ்​வொரு​வருட​னும் உறுதி குலை​யாமல் துணை நிற்​கிறோம்.

வெறுப்​பு, அநீதி மற்​றும் சர்​வா​தி​காரத்​துக்கு எதி​ராக உண்​மை​யை​யும், துணிவை​யும் மற்​றும் அரசி​யலமைப்​பை​யும் பாது​காப்​ப​தற்​கான போராட்​டத்தை வலு​வாக முன்​னெடுப்​பதே எங்​களின் உறு​தி.

இந்​திய தேசிய காங்​கிரஸின் நிறுவன தினத்தை முன்​னிட்டு அனைத்து தொண்​டர்​களுக்​கும் எனது மனமார்ந்த வாழ்த்​துகள். இந்​தி​யா​வுக்கு சுதந்​திரம் பெற்​றுத் தந்​து, அரசி​யலமைப்​புக்கு அடித்​தளமிட்​டு, ஜனநாயகம், மதச்​சார்​பின்​மை, சமூக நீதி மற்​றும் சமத்​து​வம் ஆகிய விழு​மி​யங்​களை வலுப்​படுத்​திய அந்த வரலாற்​றுச் சிறப்​புமிக்க மரபுக்​கும், மாபெரும் தியாகங்​களுக்​கும் நாங்​கள் எங்​களது அஞ்​சலியைச் செலுத்​துகிறோம். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.

காங்​கிரஸ் தலை​மையகத்​தில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் கட்​சி​ தலை​வர் கார்கே பேசும்​போது, “எங்​கள் பலம் குறைந்​திருக்​கலாம், ஆனால் எங்​களது முது​கெலும்பு இப்​போதும் நிமிர்ந்தே இருக்​கிறது. அரசி​யலமைப்​புச் சட்​டம், மதச்​சார்​பின்​மை, ஏழைகளின் உரிமை​கள் என எதி​லும் நாங்​கள் ஒரு​போதும் சமரசம் செய்து கொண்​ட​தில்​லை. காங்​கிரஸ் என்​பது ஒரு சித்​தாந்​தம். சித்​தாந்​தங்​கள்​ ஒரு​போதும்​ அழி​வ​தில்​லை’’ என்​றார்​.

SCROLL FOR NEXT