இந்தியா

சஜ்ஜன் குமாரை ஹீரோ என புகழ்வதா? - ராகுல் காந்தி வீடு முன்பு சீக்கியர்கள் போராட்டம்

மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: சீக்​கியர்​களுக்கு எதி​ரான கலவர வழக்​கில் ஆயுள் தண்​டனை பெற்​று, சிறை​யில் உயி​ரிழந்த சஜ்ஜன் குமாரை காங்​கிரஸ் தலை​வர்​கள் ஹீரோ என புகழ்ந்​ததற்கு எதிர்ப்பு தெரி​வித்து ராகுல் காந்​தி​யின் வீடு முன்பு சீக்​கியர்​கள் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். அவர் மன்​னிப்பு கேட்​க​வும் வலி​யுறுத்​தினர்.

1984-ம் ஆண்டு அக்​டோபர் 31-ல் அப்​போதைய பிரதமர் இந்​திரா காந்​தி, அவரது சீக்​கிய மெய்க்​காப்​பாளர்​களால் படு​கொலை செய்​யப்​பட்​டார். இதைத் தொடர்ந்​து, டெல்லி மற்​றும் வட இந்​தி​யா​வின் பல பகு​தி​களில் சீக்​கியர்​களுக்கு எதி​ராக பெரும் கலவரம் வெடித்​தது. டெல்லி கலவரத்​தில் மட்​டுமே சுமார் 3,000 பேர் உயிரிழந்​த​னர்.

இந்​தக் கலவரம் தொடர்​பான வழக்​கில் காங்​கிரஸ் கட்​சி​யின் மூத்த தலை​வரும், முன்​னாள் எம்​.பி.​யு​மான சஜ்ஜன் குமார் ஆயுள் தண்​டனை விதிக்​கப்​பட்டு திகார் சிறை​யில் அடைக்கப்பட்டிருந்தார்.

கடந்த இரு தினங்​களுக்கு முன்பு அவர் உடல்​நலக்​குறை​வால் கால​மா​னார். அவரது மறைவுக்கு இரங்​கல் தெரி​வித்த காங்​கிரஸ் தலை​வர்​கள் பலரும் அவரை ஹீரோ என்​றும் ரோல்​மாடல் என்​றும் புகழாரம் சூட்​டினர்.

இதற்கு எதிர்ப்பு தெரி​வித்து சீக்​கிய தலை​வர்​களும், 1984 கலவரத்​தில் பாதிக்​கப்​பட்ட சீக்​கியர்​களின் குடும்ப உறுப்​பினர்​களும் டெல்​லி​யில் உள்ள ராகுல் காந்​தி​யின் வீட்​டின் முன்பு நேற்று போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். டெல்லி சீக்​கிய குருத்​வாரா மேலாண்மை ஆணை​யத்​தின் தலை​வர் ஹர்​மீத் சிங் கல்​கா, பொதுச்​செய​லா​ளர் ஜெகதீப் சிங் காலோன் தலை​மை​யில் இந்​தப் போராட்​டம் நடத்​தப்​பட்​டது.

இதில் பங்​கேற்​றவர்​கள் சஜ்ஜன் குமார் குறித்த காங்​கிரஸ் தலை​வர்​களின் கருத்​துகளால் தங்​கள் உணர்வு புண்​பட்​ட​தாக​வும், இதற்​காக ராகுல் காந்​தி​யும், காங்​கிரஸ் தலை​வர்​களும் பகிரங்க மன்​னிப்பு கேட்க வேண்​டும் எனவும் வலி​யுறுத்​தினர்.

போ​ராட்​டத்​தையொட்டி ராகுல் காந்​தி​யின் வீட்​டின் முன்பு பலத்​த போலீஸ்​ பாது​காப்​பு போடப்​பட்​டிருந்​தது.

SCROLL FOR NEXT