டெல்​லி​யில் உள்ள மகாத்மா காந்தி நினை​வில்​லத்​தில், ராகுல் காந்தி மலர் தூவி அஞ்​சலி செலுத்​தி​னார்.

 
இந்தியா

இந்தியாவின் அழியாத ஆன்மா மகாத்மா காந்தி: எதிர்க்கட்சி தலைவர் ராகுல் புகழாரம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ‘‘அமை​தி, நீதி, சுதந்​திரத்​துக்​காக அதி​கபட்ச தியாகங்​கள் செய்த மகாத்மா காந்​தி, இந்​தி​யா​வின் அழி​யாத ஆன்​மா’’ என்று மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி புகழாரம் சூட்​டி​னார்.

மகாத்மா காந்​தி​யின் நினைவு தினம் நேற்று நாடு முழு​வதும் அனுசரிக்​கப்​பட்​டது. இதை முன்​னிட்டு தனது எக்ஸ் வலை​தளப் பக்​கத்​தில் வெளி​யிட்ட பதி​வில் மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி கூறி​யிருப்​ப​தாவது:

          

மகாத்மா காந்​தி​யின் நினைவு தினம் நாடு முழு​வதும் தியாகி​கள் தின​மாக அனுசரிக்​கப்​படு​கிறது. அமை​தி, நீதி, சுதந்​திரத்​துக்​காக அவர் முழு​மை​யாக தியாகங்​கள் செய்​தவர். அவர் இந்​தி​யா​வின் அழி​யாத ஆன்​மா.

இந்த நாட்​டுக்கு சுதந்​திரம் வாங்​கிக் கொடுத்​ததோடு, அதி​காரத்தை விட நாட்​டில் உண்​மை​தான் மேலானது என்ற அடிப்​படை கொள்​கை​யைக் கொடுத்​தவர். அவர் சாதாரண மனிதர் அல்​லர். அவர் ஒரு சாம்​ராஜ்ஜி​யம். வெறுப்​புணர்வை எதிர்த்​தவர். பயம், வன்​முறையை விட அகிம்​சை​யும் துணி​வும் மிகப்​பெரியவை என்று வாழ்ந்து காட்​டிய​வர். இந்த சிந்​தனை, கொள்கை என்​றும் அழி​யாதது. அதனால்​தான் மகாத்மா காந்தி இந்த நாட்​டின் அழி​யாத ஆன்​மா​வாக இருக்​கிறார். இவ்​வாறு ராகுல் காந்தி கூறி​னார்.

டெல்​லி​யில் உள்ள மகாத்மா காந்தி நினை​வில்​லத்​தில், ராகுல் காந்தி மலர் தூவி அஞ்​சலி செலுத்​தி​னார்.

SCROLL FOR NEXT