புதுடெல்லி: நாட்டின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் பிறந்தநாளை முன்னிட்டு நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது படத்துக்கு, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சிக்குப் பிறகு ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஓர் இருக்கையில் அமர்கிறார். அங்கு அவருக்கு பின்னால் இருந்த ராகுல் காந்தி சாதாரணமாக கார்கே தோளைப் பிடித்து (மசாஜ்) அழுத்துகிறார். அப்போது பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் அருகில் இருந்தனர்.
இதே நாளில் மற்றொரு வீடியோவும் வேகமாக வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், நாடாளுமன்ற வளாகத்தில் அமர்ந்திருந்த மாற்றுத் திறனாளி பெண் அருகே அமர்ந்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி புகைப்படம் எடுத்துக் கொள்கிறார். இந்த செயலை சமூக ஊடகவாசிகள் பாராட்டி வருகின்றனர்.