இந்தியா

“வாக்குத் திருட்டு விவகாரத்தில் பிரதமர் மோடியும் அமித் ஷாவும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்” - ராகுல் காந்தி உறுதி

செய்திப்பிரிவு

பனாஜி: வாக்குத் திருட்டு விவகாரத்​தில் பிரதமர் நரேந்​திர மோடியும், மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷாவும் சட்​டத்​தின் முன் நிறுத்​தப்​படுவார்​கள் என்று ராகுல்காந்தி தெரி​வித்​துள்​ளார்.

கோவா மாநிலம் மார்​காவோ நகரில் காங்​கிரஸ் சார்​பில் நடை​பெற்ற ‘கோவாவை பாதுகாக்கும் யாத்​திரை’யில் மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் நேற்று கலந்து கொண்​டார்.

அங்கு நடை​பெற்ற பொதுக் ​கூட்​டத்​தில் அவர் பேசிய​தாவது: வாக்​கு​களைத் திருடும் பணியை தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் செயல்​படுத்து​கிறார். மத்​திய அமைச்​சர் அமித் ஷா அதை நடைமுறைப்​படுத்து​கிறார்.

இந்த முழுத் திட்​டத்​தையும் திரைமறைவில் இருந்து பிரதமர் மோடி ஒருங்​கிணைக்​கிறார். என் மீது 45-க்​கும் மேற்​பட்ட அவதூறு வழக்​கு​கள் உள்​ளன. அமித் ஷா, நரேந்​திர மோடி உள்​ளிட்ட பலர் வழக்​கு​கள் தொடர்ந்​துள்​ளனர்.

ஆனால், ‘நரேந்​திர மோடி வாக்​கு​களைத் திருடு​கிறார்’ என்று நான் தொடர்ந்து கூறி வந்​தா​லும், அந்​தக் குற்​றச்​சாட்​டுக்​காக மட்​டும் என்மீது எந்த வழக்​கும் தொடரப்​பட​வில்லை? காங்​கிரஸ் கட்​சி​யிட​மிருந்து தப்​பிக்க முடி​யாது என்​பதை ஞானேஷ் குமார் அறிவார்.

ஏனெனில் நாங்​கள்​தான் அரசி​யலமைப்​பின் காவலர்​களும் பாது​காவலர்​களும். அரசி​யலமைப்​பைப் பாது​காப்​பது எங்​களது கடமை.

பிரதமர் நரேந்​திர மோடி, அமித் ஷா மற்​றும் ஞானேஷ் குமார் ஆகியோர் சட்​டத்​தின் முன் நிறுத்​தப்​படுவார்​கள். அவர்​கள் செய்த செயல்​களுக்கு உரிய விலை​யைச் செலுத்​து​வார்​கள். இவ்​வாறு ராகுல் காந்தி கூறினார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT