’சனாதன இந்தியாவின் எதிரி ராவணன்’ என்ற தலைப்பிலான போஸ்டர்கள்.

 
இந்தியா

ராகுல், எலான் மஸ்க் உள்ளிட்டோர் முகங்களுடன் லக்னோவில் ‘இந்திய விரோத ராவணன்’ போஸ்டர்கள்

செய்திப்பிரிவு

லக்னோ: தசரா பண்​டிகையை முன்​னிட்டு உத்​தரபிரதேச மாநிலம் லக்​னோவின் பல சந்​திப்​பு​களில் ‘சனாதன இந்​தி​யாவின் எதிரி ராவணன்’ என்ற தலைப்​பிலான போஸ்​டர்​கள் வைக்​கப்​பட்​டுள்​ளன. அவற்​றில் இந்​திய,் சர்​வ​தேசப் பிரபலங்​கள் இடம்​பெற்​றுள்​ளனர்.

இந்​தப் போஸ்​டர்​களை சனாதன் ரக் ஷா சங்​கதன் என்ற அமைப்பு ஒட்​டிய​தாகக் கூறப்​படு​கிறது.

அவற்​றில் மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி, அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் உள்​ளிட்​டோர் பத்து தலை ராவணனின் முகங்​களு​டன் சித்​தரிக்​கப்​பட்​டுள்​ளனர்.

மேலும் சமாஜ்வாதி கட்​சித் தலை​வர் அகிலேஷ் யாதவ், வங்​கதேசத்​தின் முகமது யூனுஸ், வழக்​கறிஞர் பிரசாந்த் பூஷண், உத்​தர பிரதேசத்​தைச் சேர்ந்த அரசி​யல்​வாதி​களான அதீக் அகமது, முக்​தார் அன்​சாரி (இவர்​கள் இரு​வர் மீதும் பல குற்ற வழக்​கு​கள் நிலுவை​யில் இருந்​தன) மற்​றும் பலர் அந்​தப் போஸ்டரில் இடம்​பெற்​றிருந்​தனர்.

அரசி​யல் தலை​வர்​கள், வெளி​நாட்​டுப் பிரபலங்​கள் மற்​றும் குற்ற வழக்​கு​களு​டன் தொடர்​புடைய​வர்​களை, இந்​தி​யாவின் நலனுக்கு எதிரானவர்​கள் என்று காட்​டும் வகையில் இந்​தப் போஸ்​டர்​கள் உருவாக்கப்பட்டுள்ளன.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT