இந்தியா

அமராவதி​யில் ரூ.1,002 கோடியில் குவாண்டம் மையம்: ஆந்திர அமைச்சரவை ஒப்புதல்

செய்திப்பிரிவு

அம​ராவதி: ஆந்​திர தலைநகர் அமராவ​தி​யில் குவாண்டம் தொழில்​நுட்ப மையத்​துக்​காக ரூ.1,002.49 கோடி செல​வில் கட்டிடங்​கள் கட்ட மாநில அமைச்​சரவை ஒப்​புதல் வழங்கிஉள்ளது.

ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு தலை​மை​யில் அமராவ​தி​யில் நேற்று அமைச்​சர​வைக் கூட்​டம் நடை​பெற்​றது. இதில் 34 அம்​சங்கள் குறித்து விவா​திக்​கப்​பட்​டது. குறிப்​பாக ஆந்​திர தலைநகர் அமராவ​தி​யில் குவாண்​டம் தொழில்​நுட்ப மையத்​துக்​காக ரூ.1,002.49 கோடி செல​வில் 36 மாடிகள் கொண்ட இரட்டை கோபுர கட்​டிடங்​கள் கட்ட ஒப்​புதல் அளிக்​கப்​பட்​டது. இதற்​கான ஒப்​பந்​தம் எல் அண்ட் டி நிறு​வனத்​துக்கு வழங்​கப்​பட்​டது.

பெண்​கள் பாது​காப்​புக்கு கடந்த ஜெகன் அரசில் திசா-2019 சட்​டம் இயற்​றப்​பட்​டது. இதனை ரத்து செய்​து​விட்​டு, பெண்​களுக்​கான புதிய பாது​காப்பு சட்ட மசோதா இயற்ற அமைச்​சர​வை​யில் ஒப்​புதல் அளிக்​கப்​பட்​டது. நகராட்​சி, மாநக​ராட்​சிக்கு சொந்​த​மான வாடகை இடங்​களுக்கு கால அவகாசம் நீடிக்​கப்​பட்​டது. 2 புதிய தனி​யார் பல்​கலைக்​கழகங்​களுக்கு அனு​மதி வழங்​கப்​பட்​டது.

புதிய மாவட்​டங்​களுக்கு 15 புதிய மாவட்ட கல்வி அதி​காரி​கள் நியமனம் செய்ய அனு​மதி வழங்​கப்​பட்​டது. புதிய சட்​டப்​பேர​வை, உயர் நீதி​மன்​றம் கட்ட அனு​மதி அளிக்​கப்​பட்​டது. `அம​ராவதி ஐ' திட்​டத்​துக்கு மறு டெண்​டர் வெளி​யிட தீர்மானிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT