இந்தியா

போதை மருந்து விற்பனையைத் தட்டிக் கேட்ட பஞ்சாப் சமூக செயற்பாட்டாளர் சுட்டுக் கொலை

செய்திப்பிரிவு

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்​தைச் சேர்ந்​தவர் பர்வீந்தர் சிங் ஜோட்டா. சமூக செயற்​பாட்​டாள​ரான இவர் போதை மருந்து விற்பனை, சட்​ட​விரோத​ மருந்​து விற்​பனை்​களை தடுத்து வருகிறார். இவரது ஃபேஸ்​புக் பக்​கத்தை 24 ஆயிரத்​துக்​கும் அதி​க​மானோர் பின்​பற்றி வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில் பஞ்​சாபின் மான்சா பகு​தி​யிலுள்ள ஒரு மருந்​துக் கடை​யில் சட்​ட​விரோத​மாக போதை மருந்​துகள் விற்​பனை செய்வது பர்​வீந்​தர் சிங்​குக்கு தெரிய​வந்​தது. இதையடுத்து தனது ஃபேஸ்​புக் பக்​கத்தை லைவ் செய்​து​விட்டு நேற்று காலை அந்​தக் கடைக்​குச் சென்று கடை உரிமை​யாள​ருடன் அவர் வாக்​கு​வாதம் செய்​தார்.

சட்​ட​விரோத​மாக போதைப் பொருட்​கள் விற்​பனை செய்​தால் அதை நான் தடுப்​பேன். முடிந்​தால் என்​னைக் கொல் என்று கடை உரிமை​யாளரிடம் பர்​வீந்​தர் கூறி​னார்.

தொடர்ந்து வாக்​கு​வாதம் முற்​றவே, கடை உரிமை​யாளர் தன்னிடமிருந்த துப்​பாக்​கியை எடுத்து பர்​வீந்​தரை சுட்​டார். இதில் அவர் உயி​ரிழந்​தார். போலீ​ஸார் விரைந்து வந்து பர்​வீந்​தரின் உடலைக் கைப்​பற்றி மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர். மருந்​துக் கடை உரிமை​யாளர் உள்​ளிட்​டோரை கைது செய்து போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT