இந்தியா

காதலனுடன் சேர்ந்து வருங்கால கணவரை கொன்றது எப்படி? - போலீஸாரிடம் நடித்துக் காட்டிய சியா கோயல்

செய்திப்பிரிவு

புனே: மகாராஷ்டிர மாநிலம் புனே நகரைச் சேர்ந்த பிரபல ரியல் எஸ்​டேட் தொழில​திபர் கேத்​தன் அகர்​வால் (26). இவருக்​கும் சியா கோயல் (20) என்ற இளம்​ பெண்​ணுக்​கும் திரு​மணம் நிச்சயிக்கப்பட்​டது. ஆனால், தனது காதலன் சேத்தன் சவுத்ரியுடன் சேர்ந்து கடந்த ஜூன் 18-ம் தேதி லோஹா​காட் கோட்டை மலை உச்​சியி​லிருந்து கேத்தனை கீழே தள்​ளிப் படுகொலை செய்​தார்.

இதுகுறித்து புனே ஊரகக் காவல் கண்​காணிப்​பாளர் சந்​தீப் சிங் கில் கூறிய​தாவது: "சியா கோயல் மற்​றும் சேத்​தன் சவுத்ரி ஆகிய இரு​வரை​யும் லோஹா​காட் கோட்​டை​யில் கொலை நடந்த இடத்திற்கு அழைத்​துச் சென்று விசா​ரணை நடத்​தினோம். அவர்கள் எந்​தப் பாதை வழி​யாகக் கோட்​டைக்கு வந்​தனர், சம்பவத்​தன்று எந்​தெந்த இடங்​களில் நின்று கொண்​டிருந்​தனர், கேத்​தனை எவ்​வாறு கீழே தள்​ளினர் என்​பது போன்ற அனைத்து நிகழ்​வு​களும் அச்சு அசலாக அவர்​கள் நடித்​துக் காட்​டினர்.

பாது​காப்பு காரணங்​களுக்​காக இந்த மறு உரு​வாக்க நடவடிக்கையின் போது லோஹா​காட் கோட்​டைக்கு பொது​ மக்களின் வருகை தற்​காலிக​மாகத் தடை செய்​யப்​பட்​டிருந்​தது. இந்த ஒட்​டுமொத்த விசா​ரணை​யும் முழு​மை​யாக வீடியோ பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு சந்​தீப் சிங் கில் கூறி​னார்.

காவல்​துறை வட்​டாரங்​கள் கூறுகை​யில், “கோட்​டை​யில் கேத்தனுடன் சியா கோயல் சென்​ற​போது, பின் தொடர்ந்த காதலன் சேத்​தனுக்கு சியா ஏதோ ஒரு ரகசிய சிக்​னல் கொடுத்துள்​ளார். அதன் பிறகே இரு​வரும் சேர்ந்து கேத்​தனைத் மலை உச்​சியி​லிருந்து கீழே தள்ளி கொலை செய்​துள்​ளனர். சேத்தன் சவுத்ரி கோட்​டைக்கு நுழைவுக் கட்​ட​ணம் ஏது​மின்றி ரகசி​ய​மாக நுழைந்​துள்​ளார்” என்று தெரி​வித்​தன.

SCROLL FOR NEXT