இந்தியா

புனேவில் மாநகராட்சி அலுவலகம் இடிந்து விபத்து: இடிபாடுகளில் சிக்கிய 10 பேரை மீட்கும் பணி தீவிரம்

செய்திப்பிரிவு

புனே: மகா​ராஷ்டிரா மாநிலம் புனே நகரில் உள்ள பிம்ப்ரி - சின்ச்வத் பகு​தி​யில் மாநக​ராட்​சி​யின் குப்​பைக் கிடங்கு உள்​ளது. இங்கு சுத்​தி​கரிக்​கப்​ப​டாத திடக் கழிவு பொருட்​கள் குவித்து வைக்கப்​பட்டுள்​ளன. இதன் அருகே கழிவை எரிபொருளாக்​கும் திட்​டத்​தின் மாநக​ராட்சி அலு​வல​கம் உள்​ளது.

மகா​ராஷ்டிராவில் கடந்த சில நாட்​களாக கனமழை பெய்து வருகிறது. இதில் குப்பை கிடங்​கில் குவித்து வைக்​கப்​பட்​டிருந்த திடக் கழிவு பொருட்​கள் சரிந்து அரு​கில் உள்ள மாநக​ராட்சி அலு​வல​கத்​தின் மேல் விழுந்​துள்​ளது. இதில் கட்​டிடம் நிலைகுலைந்து தரைமட்​ட​மானது.

அப்​போது மாநக​ராட்சி அலு​வல​கத்​தில் சுமார் 20 பேர் இருந்துள்ளனர். இவர்​களில் 10 பேர் தப்பி வெளி​யேறி​விட்​டனர். இடி​பாடு​கள் இடையே 10 பேர் சிக்​கி​யுள்​ள​தாக கூறப்​படு​கிறது. இங்கு தேசிய பேரிடர் மீட்பு குழு​வினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடு​பட்​டுள்​ள​தாக மாநக​ராட்சி ஆணை​யர் விஜய் சூர்யவன்ஷி தெரி​வித்​தார்​.

SCROLL FOR NEXT