இந்தியா

புனே மாநகராட்சி தேர்தல்: பாஜகவுக்கு சிவசேனா கட்சியினர் கடும் எதிர்ப்பு

செய்திப்பிரிவு

புனே: புனே மாநக​ராட்​சிக்கு வரும் ஜனவரி மாதம் 15-ம் தேதி தேர்​தல் நடை​பெறவுள்​ளது. இதில் போட்​டி​யிட சிவசேனா(ஷிண்டே) கட்​சிக்கு 15 இடங்​கள் மட்​டுமே ஒதுக்​கப்​பட்​டுள்​ளன.

பாஜக​வின் இந்த குறை​வான இட ஒதுக்​கீட்​டுக்கு எதிர்ப்பு தெரி​வித்து சிவசேனா கட்சி உறுப்​பினர்​கள் அக்​கட்​சி​யின் மூத்த தலை​வர் நீலம் கோர்​ஹே​வின் வீட்​டின் முன்​பாக நேற்று போ​ராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

முன்​ன​தாக கோர்ஹே செய்தியாளர்களிடம் கூறுகை​யில், “சிவசேனா 35 இடங்​களை கேட்​டது. இருதரப்பும் தொடர்ந்து பேசிய பிறகு 15 இடங்​களை தரு​வ​தாக பாஜக ஒப்​புக்​கொண்​டது” என்​றார்.

SCROLL FOR NEXT