இந்தியா

மாநிலத்தின் உண்மையான வளர்ச்சிக்கு சான்று: ஆந்திர அரசுக்கு குடியரசுத் தலைவர் முர்மு பாராட்டு

என். மகேஷ்குமார்

அமராவதி: ஒரு மாநிலத்​தின் உண்​மை​யான வளர்ச்​சிக்கு முதல்வர் சந்​திர​பாபு நாயுடு​வின் ஆட்​சியே மிகச் சிறந்த எடுத்துக்காட்டு என திர​வுபதி முர்மு பாராட்டு தெரி​வித்​துள்​ளார்.

ஆந்​திர மாநிலம், விஜயநகரம் தெலுங்கு தேசம் கட்சி நாடாளுமன்ற உறுப்​பினர் அப்பள நாயுடு, நேற்று காலை தனது குடும்பத்தினருடன் ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலை​வர் திரவுபதி முர்முவை சந்​தித்​துப் பேசி​னார்.

அப்​போது, ஆந்​திரத் தலைநக​ரான ‘அம​ராவ​தி’ குறித்து தான் தொகுத்​துள்ள சிறப்​புப் புத்​தகத்​தைக் குடியரசுத் தலை​வரிடம் அப்பள நாயுடு வழங்​கி​னார்.

அப்​புத்​தகத்​தில் இடம்​பெற்​றுள்ள புகைப்​படங்​களை ஆவலுடன் பார்​வை​யிட்ட திர​வுபதி முர்​மு, மாநிலத்​தின் உண்​மை​யான வளர்ச்​சிக்கு இத்​திட்​டங்​களே சான்று என நெகிழ்ச்​சி​யுடன் குறிப்​பிட்​டார்.

“தலைநகர் அமராவ​தியை முதல்வர் சந்​திர​பாபு நாயுடு மிகச் சிறப்​பாக உரு​வாக்கி வரு​கிறார். வருங்​காலத்​தில் இது ஒரு மிகச் சிறந்த உலகத் தரம் வாய்ந்த தலைநக​ராக உரு​வெடுக்​கும். சந்திரபாபு நாயுடு தொலைநோக்​குப் பார்வை கொண்ட தலை​வர். மாநிலத்​தின் ஒட்​டுமொத்த வளர்ச்​சிக்​கும் அவரே முகவரி​யாகத் திகழ்​கிறார்” எனப் புகழாரம் சூட்​டி​னார்.

SCROLL FOR NEXT