இந்தியா

பஞ்சாப் பொற்கோயில் வளாகத்தில் காலிஸ்தான் ஆதரவு கோஷம்

செய்திப்பிரிவு

அமிர்தசரஸ்: பஞ்சாப் பொற்கோயிலை கடந்த 1984-ம் ஆண்டு ஜர்னைல் சிங் பிந்தரன்வாலே என்பவர் தலைமையில் சீக்கிய தீவிரவாதிகள் கைப்பற்றினர்.

பின்னர் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் உத்தரவின்படி, ப்ளூ ஸ்டார் ஆபரேஷன் மூலம் ஜர்னைல் சிங் உட்பட அனைத்து தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்நிலையில், ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் 42-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

இதை முன்னிட்டு சீக்கிய மதவாத அமைப்பினர் பொற்கோயில் வளாகத்தில் போராட்டம் நடத்தி காலிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்பினர். தீவிரவாத இயக்கத்துக்கு தலைமை தாங்கிய ஜர்னைல் சிங் பிந்தரன்வாலேவின் போஸ்டர்களும் பொற்கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்தன.

SCROLL FOR NEXT