இந்தியா

543 மக்களவை இடங்களில் ஏன் மகளிர் இட ஒதுக்கீட்டை அளிக்க முடியாது? - பிரியங்கா காந்தி கேள்வி

செய்திப்பிரிவு

புதுடெல்லி: தொகுதி மறு​வரையறை, மகளிர் இடஒதுக்​கீடு சட்ட திருத்த மசோ​தாக்​கள் மீதான விவாதத்​தில் மக்​களவை​யில் பேசிய காங்​கிரஸ் எம்​.பி பிரி​யங்கா காந்தி பேசி​ய​தாவது: சரி​யான நேரம் பார்த்து மகளிர் இட ஒதுக்​கீடு மசோதா மற்​றும் தொகுதி மறு​வரையறை மசோதா கொண்டு வரப்​பட்​டுள்​ளது.

இந்த முழு திட்​டத்​தை​யும் உரு​வாக்​கிய​வர் மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா. சாணக்​கியர் மட்​டும் உயிரோடு இருந்​திருந்​தால், உங்​களின் அரசி​யல் தந்​திரத்தை பார்த்து அதிர்ச்​சி​யடைந்​திருப்​பார். இதைக் கேட்டு அமைச்​சர் அமித் ஷா சிரிக்​கிறார். நான் சொல்​வது சரி என அவர் ஒப்​புக் கொள்​கிறார்.

2011-ம் ஆண்டு மக்​கள் தொகை அடிப்​படை​யில் மறு​வரையறை ஆணை​யம் மூலம் மக்​களவை இடங்​களை 850-ஆக உயர்த்​தப்​பட​வுள்​ள​தாக இந்த மசோதா கூறுகிறது. மேலோட்​ட​மாக பார்த்​தால் இது நன்​றாக இருப்​பது போல் தெரி​கிறது. ஆனால், இதை கவன​மாக படித்து பார்த்​தால் அதில் உள்ள அரசி​யல் தந்​திரம் புரி​கிறது. தற்​போதுள்ள 543 மக்​களவை இடங்​களில் ஏன் மகளிர் இட ஒதுக்​கீட்டை அளிக்க முடி​யாது? தொகுதி மறு​வரையறை செய்​யாமலேயே, மகளிர் ஒதுக்​கீடு மசோ​தாவை இன்று நிறைவேற்​றி​னாலும் எந்த பாதிப்​பும் ஏற்​ப​டாது.

பிரதமர் உண்​மை​யுடன் இந்த வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்​கையை எடுத்​திருந்​தால், இந்த ஒட்​டுமொத்த அவை​யும் இந்த மசோ​தாவுக்கு ஆதரவு அளித்​திருக்​கும். இந்த மசோ​தாவை படித்து பார்க்​கும்​போது, 3 உறுப்​பினர்​கள் கொண்ட மறு​வரையறை ஆணை​யம், மாநிலங்​கள் மற்​றும் அவற்​றின் பிர​தி​நி​தி​களை முடிவு செய்​யும் எனத் தெரி​கிறது. மக்​களை ஏமாற்​ற​வும், நாட்​டின் ஒற்​றுமை மீது மிகப் பெரிய தாக்​குதல் நடத்​த​வும் மத்​திய அரசு மீண்​டும் விரும்​பு​கிறது.

சிறு மாநிலங்​களின் செல்​வாக்கை குறைப்​ப​தன் மூல​மும், ஜனநாயகத்தை துண்டு துண்​டாக சிதறடிப்​ப​தன் மூல​மும், அடுத்த தேர்​தலுக்கு மிகப் பெரிய கட்​டமைப்பு உரு​வாக்​கப்​படு​கிறது. இவ்​வாறு பிரி​யங்கா காந்தி கூறி​னார்.

பாஜக.​வின் அரசி​யல் சாணக்​கியர் அமித் ஷா என அனை​வரும் கூறு​வது வழக்​கம். இந்​நிலை​யில், “சாணக்​கியர் உயிரோடு இருந்​திருந்​தால், உங்​களின் தந்​திரத்தை பார்த்து ஆச்​சர்​யம் அடைந்​திருப்​பார்” என பிரி​யங்கா காந்தி கூறியதும் மக்​களவை​யில் இருந்த அமைச்​சர் அமித் ஷா உட்பட அனை​வரும் சிரித்​தனர்.

SCROLL FOR NEXT