காங்​கிரஸ் எம்​.பி. பிரி​யங்கா காந்தி

 
இந்தியா

மாணவர் இயக்கத்தின் வலிமையை பிரதிபலிக்கிறது: பிரியங்கா காந்தி கருத்து

செய்திப்பிரிவு

வயநாடு: மத்​திய கல்வி அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் பதவி வில​கியது, நாட்​டின் இளைஞர்​களுக்கு கிடைத்த வெற்றி என்று காங்​கிரஸ் எம்​.பி. பிரி​யங்கா காந்தி கூறி​னார்.

கேரள மாநிலம் வயநாட்​டில் பிரி​யங்கா காந்தி நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது:

தேர்வு முறை​கேடு​களுக்கு எதி​ராகப் போராடும் மாணவர்​களுக்​குக் காங்​கிரஸ் உறு​துணை​யாக நின்​றது. கல்​விச் சீர்​திருத்​தங்​களுக்​காக நாடு தழு​விய இயக்​கத்தை உரு​வாக்க பாடு​பட்​டது. வினாத்​தாள் கசிவு மற்​றும் தேர்வு சீர்​திருத்​தங்​கள் குறித்து ராகுல் காந்தி நீண்ட கால​மாகப் பேசி வரு​கிறார்.

நாடு முழு​வதும் மாணவர்​களுக்​கான ஆதரவை திரட்​டு​வதற்கு ராகுல் காந்​தி​யின் பிரச்​சா​ரம் முக்​கிய காரணம். காங்​கிரஸ், இளைஞர் காங்​கிரஸ் மற்​றும் மாணவர் அணிக்கு ஊக்​கம் அளித்​தது.

தர்​மேந்​திர பிர​தானின் ராஜி​னாமா ஒரு தொடக்​கம் மட்​டுமே. இந்த செய்​தி​யைக் கேட்​டதும் நான் சற்று உணர்ச்​சிவசப்​பட்​டேன். ஏனென்​றால் கடந்த 10 அல்​லது 12 ஆண்​டு​களில், நமது இளைஞர்​கள் எப்​போது விழித்​துக் கொள்ள போகிறார்​கள் என்று என்னை நானே பலமுறை கேட்​டுக்​கொண்​டேன்.

இந்த ராஜி​னாமா நாடு தழு​விய மாணவர் இயக்​கத்​தின் வலிமை​யைப் பிர​திபலிக்​கிறது. இன்று நான் மகிழ்ச்​சி​யாக இருக்​கிறேன். ஏனென்​றால் நமது நாட்​டின் இளைஞர்​கள் பேசி​விட்​டார்​கள். அவர்​களின் குரலை அடக்க இனி யாரும் துணிய மாட்​டார்​கள்​. இவ்வாறு பிரி​யங்​கா கூறி​னார்​.

SCROLL FOR NEXT