இந்தியா

அதிபர் விளாடிமிர் புதின் நாளை டெல்லி வருகிறார்: ரஷ்யா - இந்தியா இணைந்து எஸ் 500 ஏவுகணை தயாரிக்க திட்டம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அரசு முறை பயண​மாக நாளை டெல்லி வரு​கிறார். அவரது பயணத்​தின் போது ரஷ்​யா​வும் இந்​தி​யா​வும் இணைந்து அதிநவீன எஸ் 500 ஏவு​கணை​களை தயாரிப்​பது குறித்து முக்​கிய பேச்​சு​வார்த்தை நடத்​தப்பட உள்​ளது.

இந்​திய - ரஷ்ய 23-வது வரு​டாந்​திர உச்சி மாநாடு டிசம்​பர் 4, 5-ம் தேதி​களில் டெல்​லி​யில் நடை​பெறுகிறது. இதில் பங்​கேற்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நாளை டெல்​லிக்கு வரு​கிறார். அப்​போது பிரதமர் நரேந்​திர மோடி​யும் அதிபர் புதினும் முக்​கிய பேச்​சு​வார்த்தை நடத்த உள்​ளனர். குறிப்​பாக பாது​காப்​பு, எரிசக்​தி, வர்த்​தகம், விண்​வெளி, அணுசக்​தி, தொழில்​நுட்​பம் குறித்து தலை​வர்​கள் இரு​வரும் விரி​வான ஆலோ​சனை நடத்த உள்​ளனர்.

ரஷ்​யா​விடம் இருந்து 5 எஸ் 400 ஏவு​கணை​களை வாங்க கடந்த 2018-ம் ஆண்​டில் மத்​திய அரசு ஒப்​பந்​தம் மேற்​கொண்​டது. இது​வரை 3 எஸ் 400 ஏவு​கணை​களை ரஷ்யா வழங்​கி​யிருக்​கிறது. மீத​முள்ள 2 தொகுப்​பு​கள் அடுத்த ஆண்​டில் ஒப்​படைக்​கப்​படும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

கடந்த மே மாதம் இந்​தியா - பாகிஸ்​தான் இடையே 4 நாட்​கள் அதிதீ​விர போர் நடை​பெற்​றது. அப்​போது, இந்​தி​யா​வின் ஆபரேஷன் சிந்​தூர் தாக்​குதலின் போது எஸ்​-400 ஏவு​கணை​கள் மிக முக்​கிய பங்கு வகித்​தன. குறிப்​பாக இந்​திய எல்​லை​யில் இருந்து 300 கி.மீ. தொலை​வில் பாகிஸ்​தான் வான்​பரப்​பில் பறந்த அந்த நாட்​டின் அதிநவீன உளவு விமானம் எஸ் 400 ஏவு​கணை மூலம் சுட்டு வீழ்த்​தப்​பட்​டது.

இதைத் தொடர்ந்து ரஷ்​யா​விடம் இருந்து கூடு​தலாக எஸ் 400 ஏவு​கணை​களை வாங்க மத்​திய அரசு திட்​ட​மிட்டு உள்​ளது. இதுதொடர்​பாக ரஷ்ய அதிபர் மாளிகை செய்​தித் தொடர்​பாளர் திமித்ரி பெஸ்​கோவ் டெல்​லி​யில் நேற்று கூறும்​போது, “இந்​திய பிரதமர் நரேந்​திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சந்​திப்​பின் போது பல்​வேறு முக்​கிய ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகும். இருதரப்பு பேச்​சு​வார்த்​தை​யின்​போது எஸ் 400 ஏவு​கணை முக்​கிய இடம்​பிடிக்​கும்” என்று தெரி​வித்​தார்.

இதுதொடர்​பாக மத்​திய அரசு வட்​டாரங்​கள் கூறிய​தாவது: ரஷ்​யா​விடம் இருந்து கச்சா எண்​ணெயை இறக்​குமதி செய்ய கூடாது என்று அமெரிக்கா நிர்​பந்​தம் செய்து வரு​கிறது. இந்த விவ​காரத்​தில் அமெரிக்​கா​வின் அழுத்​தத்​துக்கு இந்​தியா அடிபணி​யாது. ரஷ்​யா​விடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்​ணெய் கொள்​முதல் செய்யப்படும். ரஷ்​யா​வின் எஸ் 400 ஏவு​கணை மூலம் சுமார் 400 கி.மீ. தொலைவு வரையி​லான இலக்​கு​களை துல்​லிய​மாக தாக்கி அழிக்க முடி​யும். அதிபர் புதினின் வரு​கை​யின் போது இந்த ஏவு​கணை​களை ரஷ்​யா​விடம் இருந்து கூடு​தலாக வாங்​கு​வது குறித்து பேச்​சு​வார்த்தை நடத்​தப்​படும்.

அடுத்​தகட்​ட​மாக ரஷ்​யா​வின் எஸ் 500 ஏவு​கணை​களை இந்​திய விமானப் படை​யில் சேர்க்​க​வும் திட்​ட​மிடப்​பட்டு இருக்​கிறது. இதற்​காக ரஷ்​யா​வும் இந்​தி​யா​வும் இணைந்து எஸ் 500 ஏவு​கணை​களை தயாரிப்​பது குறித்து அதிபர் புதினுடன் பிரதமர் மோடி விரி​வான ஆலோ​சனை நடத்த உள்​ளார். இந்த ஏவு​கணை மூலம் 600 கி.மீ. தொலைவு வரையி​லான தரை, வான் இலக்​கு​களை துல்​லிய​மாக தாக்கி அழிக்க முடி​யும்.

ரஷ்​யா​விடம் இருந்து எஸ்​யு-57 ரக போர் விமானங்​களை வாங்​கு​வது தொடர்​பாக​வும் இரு தரப்பு பேச்​சு​வார்த்தை நடத்​தப்பட உள்​ளது. இந்த போர் விமானங்​களுக்​கான தொழில்​நுட்​பத்தை இந்​தி​யா​வுக்கு வழங்க ரஷ்யா முன்​வந்​திருக்​கிறது. இதன்​படி எஸ்யு - 57 போர் விமானங்​கள் இந்​தி​யா​விலேயே தயாரிக்​கப்​படும்.

மேலும் ரஷ்​யா​வுக்கு சுற்​றுலா செல்​லும் இந்​தி​யர்​கள் விசா இல்​லாமல் அந்த நாட்​டுக்கு செல்​வது குறித்​தும் அதிபர் புதினும் பிரதமர் மோடி​யும் பேச்​சு​வார்த்​தை நடத்​த உள்​ளனர்​. இவ்​வாறு மத்​திய அரசு வட்​டாரங்​கள்​ தெரிவித்​தன.

SCROLL FOR NEXT