பிர​சாந்த் கிஷோர்

 
இந்தியா

தேர்தல் தோல்வியால் ஆசிரம வாழ்க்கைக்கு திரும்பினார் பிரசாந்த் கிஷோர்

செய்திப்பிரிவு

பாட்னா: பல அரசி​யல் கட்​சிகளுக்கு தேர்​தல் வியூக ஆலோசகராக இருந்​தவர் பிர​சாந்த் கிஷோர். இவர் ஜன் சுராஜ் என்ற கட்​சியை தொடங்கி பிஹார் தேர்​தலில் போட்​டி​யிட்​டார். ஆனால் இவரது கட்சி ஒரு இடத்​தில் கூட வெற்றி பெற​வில்​லை.

இது குறித்து பிஹாரின் தர்​பங்கா நகரில் அவர் அளித்த பேட்டியில் கூறிய​தாவது: நான் பாட்​னா​வில் உள்ள எனது இருப்பிடத்தை மாற்​றி, பாட்னா ஐஐடி அரு​கே​யுள்ள ‘தி பிஹார் நவ் நிர்​மான் ஆசிரமத்​துக்​கு’ வந்​துள்​ளேன். பிஹார் மாநிலம் அடுத்த சட்​டப்​பேரவை தேர்​தலை சந்​திக்​கும் வரை நான் இங்கு தங்கியிருப்​பேன்.

அடுத்த தேர்​தலில் ஜன் சுராஜ் கட்சி தாக்​கத்தை ஏற்​படுத்​தும் என நம்​பு​கிறேன். பிஹார் வாக்​காளர்​கள் ஜாதி, மதம் மற்​றும் நிதி ஆதா​யத்​துக்கு முக்​கி​யத்​து​வம் அளிக்​காமல், சொந்த நலனுக்கு முன்​னுரிமை அளிக்க வேண்​டும்.

அவர்​கள் தங்​கள் குழந்​தைகளின் எதிர்​காலத்தை எண்ணி வாக்களிக்க வேண்​டும். பிரதமர் மோடி, நிதிஷ் குமார், லாலு பிரசாத் யாதவ் ஆகியோரது அலை​யில் சிக்​கக் கூடாது. பெண்​கள் வேலை​ வாய்ப்பு திட்​டத்​தின் கீழ் அளிக்​கப்​படும் ரூ.10,000 நிதிக்காக உங்கள் ஓட்​டுகளை விற்​கக் கூடாது. இவ்​வாறு பிரசாந்த்​ கிஷோர்​ கூறினார்​.

SCROLL FOR NEXT