இந்தியா

ரூ.1000 நன்கொடை அளிக்க பிரசாந்த் கிஷோர் வேண்டுகோள்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: பிரபல தேர்​தல் வியூ​கர் பிர​சாந்த் கிஷோர், பிஹாரில் ஜன் சுராஜ் என்ற புதிய கட்​சியை தொடங்கி சட்டப்பேரவை தேர்​தலில் களம் இறங்​கி​னார். ஆனால், ஓர் இடத்​தில் கூட வெற்றி பெற முடிய​வில்​லை.

தேர்​தல் தோல்விக்​குப்​பின் மேற்கு சம்​ப​ரானில் உள்ள காந்தி ஆசிரமத்​தில் நேற்று முன்​தினம் அமைதி உண்​ணா​விரதம் இருந்​தார். இந்​நிலை​யில் நேற்று அவர் நிருபர்​களிடம் கூறிய​தாவது:

பிஹாரில் மீண்​டும் முதல்​வ​ராக பதவி ஏற்​றுள்ள நிதிஷ் அமைச்​சர​வை​யில் உள்​ளவர்​கள் எல்​லாம் ஊழல்​வா​தி​கள் மற்​றும் குற்​ற​வாளி​கள். இது பிஹார் மக்​கள் முகத்​தில் விழுந்த அறை. ஊழல் தலை​வர்​கள் பலரை அமைச்​சர​வை​யில் சேர்த்​தது காயத்​தில் உப்பை தடவுவது போன்​றது.

ஜனவரி 15-ம் தேதி முதல் ‘பிஹார் நவநிர்​மான் சங்​கல்ப் யாத்​திரை தொடங்​கப்​படும். 18 மாதங்​கள் இந்த யாத்​திரை நடை​பெறும். அப்​போது ஜன் சுராஜ் தொண்​டர்​கள் வீடு வீடாக சென்று மக்​களை சந்​தித்து இந்த அரசு செய்த தவறுகள் குறித்து விழிப்​புணர்வை ஏற்​படுத்த வேண்​டும்.

அதற்கு முன்னர் கட்​சியை வலுப்​படுத்த நான் கடந்த 20 ஆண்​டு​களில் சேர்த்த சொத்து முழு​வதை​யும் கட்​சிக்கு நன்​கொடை​யாக வழங்​கு​வேன். அதே​போல், பிஹார் மக்​களும், ஜன் சுராஜ் கட்​சிக்கு ஆண்​டுக்கு ரூ.1000 நன்​கொடை அளிக்க வேண்​டும். இவ்வாறு பிரசாந்த் கிஷோர் கூறினார்.

SCROLL FOR NEXT