புதுடெல்லி: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று பதவியை ராஜினாமா செய்தார். பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுரைப்படி அவரது ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக் கொண்டார்.மேலும், பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின்படி புதிய கல்வித் துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கு குடியரசுத் தலைவர் முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
தற்போது நுகர்வோர் விவகாரம், உணவு - பொது விநியோகம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட துறைகளை பிரகலாத் ஜோஷி கவனித்து வருகிறார். அதோடு கல்வித் துறையும் அவருக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. கர்நாடகாவின் தார்வாட் மக்களவைத் தொகுதி எம்.பி.யான பிரகலாத் ஜோஷி கடந்த 2019-ம் ஆண்டு முதல் மத்திய அமைச்சராக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.