இந்தியா

மோடியுடன் போலந்து பிரதமர் டொனால்டு டஸ்க் சந்திப்பு: இரு​நாட்டு உறவை பலப்படுத்த முக்​கிய பேச்​சு​வார்த்தை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: பிரதமர் நரேந்​திர மோடி​யும், போலந்து பிரதமர் டொனால்டு டஸ்க்​கும் நேற்று சந்​தித்​துப் பேசினர். அப்​போது இருதரப்பு உறவை பலப்​படுத்​து​வது தொடர்​பாக ஆலோசிக்கப்பட்டது. பிரதமர் நரேந்​திர மோடி​யின் அழைப்​பின் பேரில், போலந்து பிரதமர் டொனால்டு டஸ்க் மூன்று நாள் அரசு முறைப் பயண​மாக

நேற்று முன்​தினம் இந்​தியா வந்​தார். இந்​தப் பயணத்​தின் தொடக்க​மாக போலந்து பிரதமர் டஸ்க் ராஜ்​காட்​டில் உள்ள மகாத்மா காந்தி சமா​தி​யில் அஞ்​சலி செலுத்​தி​னார். டெல்​லி​யில் உள்ள ஹைத​ரா​பாத் இல்​லத்​தில் பிரதமர் நரேந்​திர மோடி​யும் டொனால்டு டஸ்​கும் நேற்று சந்​தித்​துப் பேச்​சு​வார்த்தை நடத்தினர். அப்​போது இருதரப்பு

பிர​தி​நி​தி​கள் பங்​கேற்றனர். இந்​தி​யா-​போலந்து இடையி​லான இருதரப்பு உறவு​களின் அனைத்து அம்​சங்​களை​யும் ஆய்வு செய்வதற்​கும், இரு நாடு​களின் செயல்​திட்ட ரீதியி​லான கூட்டாண்​மையை மேலும் வலுப்​படுத்​து​வதற்​கான வழிகளை ஆராய்வதற்கும் இந்​தப் பேச்​சு​வார்த்தை நடை​பெற்​றது.

இந்​தி​யத் தரப்பு பிர​தி​நி​தி​கள் குழு​வில் வெளி​யுறவு அமைச்​சர் எஸ். ஜெய்​சங்​கர், தேசி​யப் பாது​காப்பு ஆலோ​சகர் அஜித் தோவல், வெளி​யுறவுச் செயலர் விக்​ரம் மிஸ்ரி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். போலந்து பிரதமருடன் அவரது குழு உறுப்​பினர்​கள் பங்​கேற்​றனர். டெல்​லி​யில் தனது நிகழ்ச்​சிகளை முடித்துக் கொண்ட பின்​னர், போலந்து பிரதமர் பெங்​களூரு செல்கிறார். அங்கு தகவல் தொழில்​நுட்​பம், விண்​வெளி, வணி​கத் துறை​யினருடன் கலந்​துரை​யாடு​கிறார்.

பிரதமர் மோடியும், போலந்து பிரதமர் டொனால்டு டஸ்க்கும் கூட்டறிக்கை வெளியிட்டனர். அதில் கூறப்பட்டிருப்பதாவது: எல்லை தாண்டிய தீவிரவாதம் உட்பட அனைத்து வகையான தீவிரவாதத்துக்கும் கண்டனம் தெரிவிக்கிறோம். எந்தக் காரணத்துக்காகவும் தீவிரவாதத்தை நியாயப்படுத்த முடியாது. 2025 ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடந்த தாக்குதலுக்கு வன்மையான கண்டனம் தெரிவிக்கிறோம்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 1267 குழு பட்டியலிட்டவை உள்ளிட்ட தீவிரவாதிகள், அமைப்புகளுக்கு எதிராக வலுவான, ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை. தீவிரவாதப் புகலிடங்களையும் நிதி வலையமைப்புகளையும் ஒழிக்க அனைத்து நாடுகளும் தொடர்ந்து பணியாற்ற வேண்டும்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா உறுப்பினராவதற்கும், 2028-29 காலத்துக்கான தற்காலிக உறுப்பினர் பதவிக்கான இந்தியாவின் வேட்புமனுவுக்கும் போலந்து ஆதரவு தெரிவிக்கிறது. இந்தோ-பசிபிக் பகுதி சுதந்திரமாகவும் அமைதியாகவும் இருக்க வேண்டும். ஐ.நா. கடல்சார் சட்ட உடன்படிக்கை உள்ளிட்ட சர்வதேசச் சட்டத்தை மதிக்க வேண்டும். இந்தோ-பசிபிக் பெருங்கடல் முன்முயற்சியில் சேருமாறு போலந்தை இந்தியா அழைக்கிறது. ஜி20 பணிக்குழுக்களில் ஒத்துழைக்கவும் இரு தரப்பும் தயாராக உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT