புதுடெல்லி: தெலங்கானா பாஜக மூத்த தலைவர் பூரா நர்சய்யா கவுட் தெரிவித்துள்ளார். தொகுதி மறுவரையறை மசோதா குறித்து அவர் மேலும் கூறியதாவது:
தொகுதி மறுவரையறை மசோதாவின் சிறப்பு அம்சம் என்னவென்றால், இந்த மசோதா இந்தியாவுக்கு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீண்டும் கிடைக்க உதவும்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீண்டும் பெற வேண்டும் என்பது ஒவ்வொரு இந்தியரின் கனவு. ஒரு நாள் நாம் அதை திரும்ப பெறுவோம். அந்த பிராந்தியத்தின் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்துக்கு வருவார்கள். அதுதான் இந்த மசோதாவின் சிறப்பம்சம். இவ்வாறு பூரா நர்சய்யா கவுட் கூறினார்.