இந்தியா

நிவாரணம் குறித்த கேள்விக்கு பிரதமர் அலுவலகம் பதில்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் பல விஷயங்கள் குறித்து எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்புவர். இதற்கு அரசு சார்பில் பதில் அளிக்கப்படும். இந்நிலையில் பிஎம் கேர்ஸ் நிதி, பிரதமரின் தேசிய நிவாரண நிதி மற்றும் தேசிய பாதுகாப்பு நிதி (என்டிஎப்) ஆகியவற்றின் விவரங்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்வியை பிரதமர் அலுவலகத்துக்கு மக்களவை செயலாளர் அனுப்பியுள்ளார்.

இதற்கு பிரதமர் அலுவலகம் அளித்த பதிலில், ”மக்களவை அலுவல் நடத்தை விதிமுறைகள் 41(2) மற்றும் உட் பிரிவுகளின் கீழ் பிரதமரின் கட்டுப்பாட்டில் உள்ள பிஎம் கேர்ஸ், பிரதமரின் தேசிய நிவாரண நிதி, தேசிய பாதுகாப்பு நிதி ஆகியவை குறித்து கேள்விகள் கேட்க அனுமதி இல்லை” என கூறப்பட்டுள்ளது.

          
SCROLL FOR NEXT