இந்தியா

பிரிக்ஸ் நாடுகளின் எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் எம்​பிக்​களு​டன் பிரதமர் நரேந்திர மோடி டெல்லி​யில் நேற்று கலந்​துரையாடினார்.

பிரிக்ஸ் கூட்​டமைப்​பில் இந்​தியா, ரஷ்யா, சீனா உள்​ளிட்ட 11 நாடுகள் உறுப்​பினர்​களாக உள்​ளன. இந்த கூட்​டமைப்​பின் உச்சி மாநாடு கடந்த செப்​டம்​பரில் டெல்​லி​யில் நடை​பெற்​றது. இதன் தொடர்ச்​சி​யாக பிரிக்ஸ் நாடாளு​மன்ற கூட்​டமைப்​பின் இரு நாள் சபாநாயகர்​கள் மாநாடு பழைய நாடாளு​மன்ற கட்​டிடத்​தில் நேற்று தொடங்​கியது. இதில் பிரிக்ஸ் நாடுகளின் நாடாளு​மன்ற சபாநாயகர்​கள், துணை சபாநாயகர்​கள், மூத்த எம்​பிக்​கள் பங்கேற்​றனர்.

மக்​களவை சபாநாயகர் ஓம் பிர்லா மாநாட்டை தொடங்கி வைத்தார். அப்​போது அவர் பேசிய​தாவது: பிரதமர் நரேந்​திர மோடி தலை​மையில் அண்​மையில் நடை​பெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்​டில் ஒரு​மித்த கருத்​துடன் கூட்​டறிக்கை வெளியிடப்பட்டது. இது ஒரு மைல் கல் ஆகும். பிரிக்ஸ் நாடுகளில் நாடாளு​மன்ற கட்​டமைப்பை வலுப்​படுத்த வேண்​டும்.

சர்​வ​தேச சவால்​களுக்கு தீர்வு காண பிரிக்ஸ் நாடுகளின் நாடாளு​மன்​றங்​கள் ஒன்​றிணைந்து செயல்​பட வேண்​டும். போர் பதற்றங்களை தணிக்க ஆக்​கப்​பூர்​வ​மான நட​வடிக்​கைகளை எடுக்க வேண்​டும். சர்​வ​தேச அரங்​கில் குளோபல் சவுத் கூட்டமைப்​பின் குரல் ஓங்கி ஒலிக்க வேண்​டும். இவ்​வாறு சபாநாயகர் ஓம் பிர்லா பேசினார்.

மாநாட்​டில் பங்​கேற்ற பிரிக்ஸ் நாடாளு​மன்ற குழு​வினருடன் பிரதமர் நரேந்​திர மோடி நேற்று கலந்​துரையாடினார். இது​குறித்து சமூக வலை​தளத்​தில் அவர் வெளி​யிட்ட பதி​வில், “பிரிக்ஸ் நாடுகளின் எம்​பிக்​களு​டன் ஆக்​கப்​பூர்​வ​மான கலந்​துரையாடலை நடத்​தினேன். பல்​வேறு விவகாரங்​கள் குறித்து நாங்​கள் விரிவாக விவாதித்​தோம்” என்று தெரி​வித்​துள்​ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT