இந்தியா

7 கோடி பயணிகளை கையாளும் நொய்டா சர்வதேச விமான நிலையம்: இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

செய்திப்பிரிவு

புதுடெல்லி: நொய்டா ஜேவார் சர்​வ​தேச விமான​நிலை​யத்தை பிரதமர் நரேந்​திர மோடி இன்று (மார்ச் 28) தொடங்​கி வைக்​க​வுள்​ளார். டெல்​லி​யின் இந்​திரா காந்தி சர்​வ​தேச விமான​ நிலை​யத்​துக்கு துணை​யாகச் செயல்​படும் வகை​யில் டெல்லி - என்​சிஆர் பிராந்​தி​யத்​துக்​கான 2-வது சர்​வ​தேச விமான ​நிலை​ய​மாக நொய்டா ஜேவார் விமான ​நிலை​யம் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது.

இந்​தி​யா, ஒரு உலகளா​விய விமானப் போக்​கு​வரத்து மைய​மாக உரு​வெடுக்​கும் பயணத்​தில் இந்​தத் திறப்பு விழா ஒரு குறிப்​பிடத்​தக்க மைல்​ கல்​லாக அமை​யும் என்று மத்​திய அரசு தெரி​வித்​துள்​ளது.

          

டெல்லி புறநகர் பகு​தி​யான நொய்​டா​வில், ஆசி​யா​விலேயே மிகப்​பெரிய​தாக சர்​வ​தேச விமான நிலை​ய​மாக நொய்டா ஜேவார் உரு​வாகி​யுள்​ளது. இது ஐரோப்​பா​வின் நுழைவு வாயி​லாக விளங்​கப் போகிறது என்று நிபுணர்​கள் கணித்​துள்​ளனர்.

இந்த சர்​வ​தேச விமான நிலை​யம் முழு​மை​யாக செயல்​பாட்​டுக்கு வரும்​போது ஆண்​டுக்கு 7 கோடி பயணி​களைக் கையாளும் திறன் கொண்​ட​தாக இருக்​கும். தொழில் துறை​யினரைப் பெரு​மள​வில் ஈர்க்​கும் வித​மாக, விமான நிலை​யத்​தைச் சுற்றி தொழில் மற்​றும் தளவாடங்​களை மைய​மாகக் கொண்ட தொகுப்​பு​கள் (கிளஸ்​டர்​கள்) உரு​வாக்​கப்​பட்​டுள்​ளன.

இந்த நவீன விமான​ நிலை​யத்​தின் முதல் முனை​யத்தை பிரதமர் நரேந்​திர மோடி இன்று திறந்து வைக்​கவுள்​ளார். இதற்​காக இன்று காலை உத்​தரபிரதேசம் வரு​கிறார் பிரதமர் மோடி. காலை 11.30 மணி​யள​வில் கவுதம புத்​தநகர் மாவட்​டத்​தில் உள்ள ஜேவார் பகு​தி​யில் அமைந்​துள்ள நொய்டா சர்​வ​தேச விமான​ நிலை​யத்​தின் முனையக் கட்​டிடத்தை அவர் பார்​வை​யிடு​வார்.

அதைத் தொடர்ந்து பகல் 12 மணி​யள​வில் நொய்டா விமான நிலை​யத்​தின் முதல் கட்​டிடத்​தைத் திறந்​து​வைத்து அங்கு நடை​பெறும் நிகழ்ச்​சி​யில் உரை​யாற்​றவுள்​ளார்.

SCROLL FOR NEXT