இந்தியா

மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: அனைத்து மாநில முதல்​வர்​களு​டன் பிரதமர் நரேந்​திர மோடி காணொலி வாயி​லாக நேற்று முக்​கிய ஆலோ​சனை நடத்​தி​னார்.

அமெரிக்​கா, ஈரான் இடையி​லான போரால் உலகம் முழு​வதும் கச்சா எண்​ணெய், எல்​பிஜி, எல்​என்ஜி எரி​வா​யுக்கு கடும் தட்​டுப்​பாடு ஏற்​பட்​டிருக்​கிறது. இந்​தி​யா​வின் கச்சா எண்​ணெய் தேவை​யில் சுமார் 85 சதவீதம் வெளி​நாடு​களில் இருந்து இறக்​குமதி செய்​யப்​படு​கிறது. இதே​போல நாட்​டின் எல்​பிஜி தேவை​யில் 60 சதவீத​மும், எல்​என்ஜி தேவை​யில் 50 சதவீத​மும் இறக்​குமதி செய்​யப்​பட்டு வரு​கிறது.

          

போர் காரண​மாக வளை​குடா நாடு​களில் இருந்து கச்சா எண்​ணெய், எரி​வா​யுவை இறக்​குமதி செய்ய முடிய​வில்​லை. இதைத் தொடர்ந்து ரஷ்​யா​விடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்​ணெய், எல்​என்ஜி கொள்​முதல் செய்​யப்​படு​கிறது. மேலும் அமெரிக்​கா, ஐரோப்​பிய நாடு​களில் இருந்து எல்​பிஜி இறக்​குமதி செய்​யப்​பட்டு வரு​கிறது.

தற்​போதைய சூழலில் அடுத்த 60 நாட்​களுக்கு தேவை​யான பெட்​ரோல், டீசலும், அடுத்த ஒரு மாதத்​துக்கு தேவை​யான எல்​பிஜி காஸும் கையிருப்​பில் உள்​ளது. எனினும் சமூக வலை​தளங்​களில் பரவும் வதந்​தி​களால் பல்​வேறு பகு​தி​களில் செயற்​கை​யான நெருக்​கடி எழுகிறது.

பிரதமர் நரேந்​திர மோடி நாடாளு​மன்​றத்​தில் அண்​மை​யில் பேசும்​போது, “கரோனா பெருந்​தொற்று காலத்தை போன்று தற்​போதைய நெருக்​கடியை மத்​திய, மாநில அரசுகள் ஒன்​றிணைந்து எதிர்​கொள்ள வேண்​டும்’’ என்று அழைப்பு விடுத்​தார்.

இதைத் தொடர்ந்து அனைத்து மாநில முதல்​வர்​களு​டன் பிரதமர் நரேந்​திர மோடி காணொலி வாயி​லாக நேற்று இரவு முக்​கிய ஆலோ​சனை நடத்​தி​னார். இதில் ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு, சத்​தீஸ்​கர் முதல்​வர் விஷ்ணு தியோ சாய், தெலங்​கானா முதல்​வர் ரேவந்த் ரெட்​டி, உத்தர பிரதேச முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத், காஷ்மீர் முதல்​வர் ஒமர் அப்​துல்​லா, பஞ்​சாப் முதல்​வர் பகவந்த் மான், மத்​திய பிரதேச முதல்​வர் மோகன் யாதவ், ஜார்க்​கண்ட் முதல்​வர் ஹேமந்த் சோரன், உத்​த​ராகண்ட் முதல்​வர் புஷ்கர் சிங் தாமி, குஜ​ராத் முதல்​வர் பூபேந்​திர படேல், மகா​ராஷ்டிர முதல்​வர் தேவேந்​திர பட்​னா​விஸ் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர். மத்​திய அமைச்​சர்​கள் அமித் ஷா, ராஜ்​நாத் சிங் உள்​ளிட்​டோரும் ஆலோ​சனை​யில் கலந்து கொண்​டனர்.

தமிழகம், புதுச்​சேரி, கேரளம், மேற்​கு​வங்​கம், அசாம் மாநிலங்​களில் தேர்​தல் நடத்தை விதி​கள் அமலில் இருப்​ப​தால் அந்த மாநில முதல்​வர்​கள் காணொலி கூட்​டத்​தில் பங்​கேற்​க​வில்​லை. எனவே 5 மாநிலங்​களின் தலை​மைச் செய​லா​ளர்​களு​டன் மத்​திய கேபினட் செய​லா​ளர் தனி​யாக ஆலோ​சனை நடத்த உள்​ளார்.

SCROLL FOR NEXT