இந்தியா

எம்ஜிஆர் பிறந்த நாளில் பிரதமர் மோடி மரியாதை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: தமிழ்​நாடு முன்​னாள் முதல்​வர் எம்​.ஜி.​ராமச்​சந்​திரன் பிறந்​த​நாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்​திர மோடி எக்ஸ் சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது:

மாபெரும் தலை​வர் எம்​.ஜி.ஆர். பிறந்​த​நாளில் அவருக்கு எனது மரி​யாதையை செலுத்​துகிறேன். தமிழ்​நாட்​டின் முன்​னேற்​றத்​துக்கு அவர் ஆற்​றிய பங்​களிப்பு மிகச் சிறப்​பானது. அதே​போல் தமிழ் கலாச்​சா​ரத்​தைப் பிரபலப்​படுத்​து​வ​தில் அவரது பங்கு குறிப்​பிடத்​தக்​கது.

நமது சமூகத்​துக்​கான அவரது தொலைநோக்​குப் பார்​வையை நனவாக்க நாங்​கள் எப்​போதும் தொடர்ந்து பணி​யாற்​று​வோம். இவ்​வாறு அதில் கூறி​யுள்​ளார்​.

SCROLL FOR NEXT