இந்தியா

மேற்காசிய போர் நெருக்கடி தொடர்பாக பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் ஆலோசனை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மேற்​காசிய போரால் எழுந்துள்ள நெருக்​கடி தொடர்​பாகப் பொருளா​தார நிபுணர்​களு​டன் பிரதமர் நரேந்​திர மோடி டெல்​லி​யில் நேற்று முக்​கிய ஆலோ​சனை நடத்​தி​னார்.

மேற்​காசிய போர் (அமெரிக்கா - ஈரான் போர்) காரணமாக உலகம் முழு​வதும் பொருளாதார நெருக்​கடி ஏற்​பட்​டிருக்கிறது. ஈரானை ஒட்​டிய ஹார்முஸ் ஜலசந்தி மூடப்​பட்டு கச்சா எண்​ணெய், எரி​வாயு போக்குவரத்து முடங்கி உள்​ளது. இதன் எதிர்​விளை​வாக சர்​வ​தேச சந்தையில் கச்சா எண்​ணெய் விலை கணிச​மாக உயர்ந்து வரு​கிறது.

இந்​தி​யா​வின் கச்சா எண்ணெய் தேவை​யில் 60 சதவீதத்தை வளை​குடா நாடு​கள் பூர்த்தி செய்து வந்​தன. ஹார்முஸ் ஜலசந்தி மூடலால் வெனிசுலா, ரஷ்யா உள்​ளிட்ட நாடு​களிடம் இருந்து கூடு​தல் விலைக்கு இந்​திய நிறு​வனங்​கள் கச்சா எண்​ணெய்யை வாங்கி வரு​கின்​றன.

உரங்​கள் உற்​பத்​திக்கு இயற்கை எரி​வாயு மிக​வும் அவசியம். எரி​வாயு தட்​டுப்​பாடு காரணமாக இந்​தி​யா​வில் உரங்​களின் உற்​பத்​தி​யும் பாதிக்​கப்​பட்டு உள்​ளது. உரங்​கள் உற்​பத்​திக்​கான மூலப்​பொருட்​களை இறக்​குமதி செய்​வதும் சிக்​கலாகி உள்​ளது.

இந்​தி​யா​வின் சமையல் எண்ணெய் தேவை​யில் சுமார் 65 சதவீதம் வெளி​நாடு​களில் இருந்து இறக்​குமதி செய்​யப்​படுகிறது. இதே​போல தங்​கத்​தின் தேவை​யில் சுமார் 90 சதவீதம் வெளி​நாடு​களில் இருந்து இறக்​குமதி செய்​யப்​பட்டு வரு​கிறது.

சர்​வ​தேச சந்​தை​யில் கச்சா எண்​ணெய், எரி​வா​யு, தங்​கம் மற்​றும் சமையல் எண்​ணெய்யை அமெரிக்க டாலரை கொடுத்து மட்​டுமே வாங்க முடி​யும். சமீபத்​திய புள்​ளி​விவர நில​வரத்​தின்​படி இந்​தி​யா​விடம் 682.3 பில்​லியன் அமெரிக்க டாலர் உள்​ளது.

இந்த தொகை​யின் மூலம் இந்​தி​யா​வின் 11 மாதங்​களுக்​கான இறக்​குமதி தேவை​களைப் பூர்த்தி செய்ய முடி​யும். ஆனால் சர்​வ​தேச சந்​தை​யில் கச்சா எண்​ணெய் உள்​ளிட்​ட​வற்​றின் விலை அதி​கரித்து வரு​வ​தால் இந்​தி​யா​வின் டாலர் கையிருப்பு கணிச​மாக குறைந்து வரு​கிறது.

இதை கருத்​தில் கொண்டே ஓராண்​டுக்கு தங்​கம் வாங்குவதை தவிர்க்க வேண்​டும் என்று பிரதமர் மோடி அண்​மை​யில் அழைப்பு விடுத்​தார். மேலும் விவசாயிகள் இயற்கை விவசாயத்​துக்கு மாற வேண்​டும். பெட்ரோல், டீசலை சிக்​க​ன​மாக பயன்படுத்த வேண்​டும். சமையல் எண்ணெய் பயன்​பாட்டை 10 சதவீதம் குறைக்க வேண்​டும் என்று பிரதமர் மோடி அறி​வுறுத்​தி​னார்.

சமீபத்​திய பெட்​ரோல், டீசல் விலை உயர்​வு, வணிக சமையல் காஸ் விலை உயர்வு காரணமாக நாடு முழு​வதும் அத்​தியாவசி​யப் பொருட்​கள் மற்​றும் உணவு வகை​களின் விலை படிப்படி​யாக அதி​கரித்து வரு​கிறது.

இந்​தச் சூழலில் மேற்​காசிய போரால் இந்​தி​யா​வில் ஏற்​பட்டுள்ள பொருளா​தார பாதிப்​பு​கள், இவற்றை எதிர்​கொள்ள மேற்​கொண்ட நடவடிக்​கைகள் குறித்து பொருளா​தார ஆலோ​சனைக் குழு​வுடன் பிரதமர் நரேந்​திர மோடி டெல்​லி​யில் நேற்று முக்​கிய ஆலோ​சனை நடத்​தி​னார்.

பிரதமர் நரேந்​திர மோடிக்கு அறி​வுரைகளை வழங்​கும் பொருளா​தார ஆலோ​சனைக் குழு​வில் 3 நிரந்தர உறுப்​பினர்​களும், 11 பகுதி நேர உறுப்​பினர்​களும் உள்​ளனர். குழு​வின் தலை​வர் மகேந்​திர தேவ் உட்பட அனைத்து உறுப்​பினர்​களும் நேற்​றைய கூட்​டத்​தில் பங்​கேற்​றனர்.

இந்​தக் கூட்​டத்​தில் தற்போதைய சூழலுக்கு ஏற்ப புதிய பொருளா​தா​ரக் கொள்​கைகள் வரையறுக்​கப்​பட்​ட​தாகக் கூறப்​படு​கிறது. மேலும் நாட்​டின் பொருளா​தார வளர்ச்​சியை உறுதி செய்​வது, புதி​தாக தொழில் தொடங்க ஏது​வான சூழலை உரு​வாக்​கு​வது, அந்​நிய முதலீடு​களை அதி​கள​வில் ஈர்ப்​பது குறித்து விரி​வாக ஆலோ​சிக்​கப்​பட்​டது. கூட்​டத்​தில் எடுக்​கப்​பட்ட முடிவு​களின் அடிப்​படை​யில் மத்​திய அரசு சார்​பில் விரை​வில்​ புதி​ய அறி​விப்​பு​கள்​ வெளி​யாகும்​ என்​று எ​திர்​பார்​க்​கப்​படுகிறது.

SCROLL FOR NEXT