இந்தியா

“உங்களை சந்திக்க ‘சாய் வாலா’ வந்துள்ளேன்” - ரோம் விழாவில் பிரதமர் மோடி பேச்சு

செய்திப்பிரிவு

ரோம்: இத்தாலி தலைநகர் ரோமில் நடை​பெற்ற விழா​வில் பேசிய பிரதமர் நரேந்​திர மோடி, “உங்​களை சந்​திக்க 'சாய்​வாலா' வந்​துள்​ளேன்” என்று தெரி​வித்​தார். அப்​போது அவை​யில் சிரிப்​பலை எழுந்​தது.

ஐ.நா. சபை​யின் உணவு மற்​றும் வேளாண்மை அமைப்​பின் தலைமை அலு​வல​கம் ரோமில் உள்​ளது. அங்கு நேற்று முன்​தினம் நடை​பெற்ற விழா​வில் பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்​றார். அப்​போது அவர் பேசும்​போது, “மே 21-ம் தேதி சர்​வ​தேச தேநீர் தினம் கொண்​டாடப்​படு​கிறது.

இதற்கு ஒரு நாள் முன்​ன​தாக உங்​களை சந்​திக்க ‘சாய்​ வாலா' வந்​துள்​ளேன். இந்​தி​யா​வில் பல்​வேறு வகை​யான தேநீர் உள்​ளன. எங்​களது தேநீர் சுவை, மணம், திடம் நிறைந்​தது” என்று தெரி​வித்​தார்.

‘சாய்​ வாலா' வந்​துள்​ளேன் என்று பிரதமர் மோடி கூறிய​போது அவை​யில் சிரிப்​பலை எழுந்​தது. இந்த வீடியோ சமூக வலை​தளங்​களில் வைரலாக பரவி வரு​கிறது.

நெதர்​லாந்துடன் ஒப்​பந்​தங்​கள்

பிரதமர் நரேந்​திர மோடி சில நாட்​களுக்கு முன்பு நெதர்​லாந்​தில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​ட​போது 17 ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகின. குறிப்​பாக நெதர்​லாந்​தின் ஏஎஸ்​எம்​எல் நிறு​வனம், டாடா எலெக்ட்​ரானிக்ஸ் இணைந்து குஜ​ராத்​தில் புதிய செமிகண்​டக்​டர் ஆலையை அமைக்க ஒப்​பந்​தம் கையெழுத்​தாகி உள்​ளது.

குஜ​ராத்​தில் தயாரிக்​கப்பட உள்ள செமிகண்​டக்​டர்​களை மொபைல்​போன், கார்​களில் பயன்​படுத்த முடி​யும். சுவீடன் நாட்​டில் பிரதமர் மோடி சுற்​றுப்​பயணம் செய்​த​போது அந்த நாட்​டுடன் 6 ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகின.

இந்​தி​யா​வுடன் தடையற்ற வர்த்தக ஒப்​பந்​தம் மேற்​கொள்​ளப்​படும். இரு நாடு​கள் இடையி​லான வர்த்​தகம் அடுத்த 5 ஆண்​டு​களில் இரு மடங்​காக அதி​கரிக்​கப்​படும் என்று சுவீடன் பிரதமர் உல்ப் கிறிஸ்​டர்​சன் உறுதி அளித்​துள்​ளார்.

ஐஎம்​இசி வழித்தட திட்​டம்

நார்வே நாட்​டில் பிரதமர் மோடி பயணம் மேற்​கொண்​ட​ போது 12 ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகின. குறிப்​பாக இந்​தி​யா​வின் சூரிய சக்​தி, காற்​றாலை, நீர் மின் சக்​தி, அணு சக்தி உற்​பத்தி துறை​களில் முதலீடு செய்ய நார்வே உறுதி அளித்​துள்​ளது.

மேலும் இந்தியாவுக்கு கூடு​தலாக எல்​பிஜி காஸை விநி​யோகிக்க நார்வே உறுதி அளித்​திருக்​கிறது. இத்​தாலி​யில் பிரதமர் நரேந்​திர மோடி சுற்​றுப்​பயணம் செய்​த​போது, இந்​தி​யா- மத்​திய கிழக்​கு- ஐரோப்பா வழித்தட திட்​டத்தை (ஐஎம்​இசி) நிறைவேற்ற இரு நாடு​களும் உறுதி பூண்​டன.

இந்த ஒப்​பந்​தம் இந்​தி​யா, வளை​குடா நாடு​கள், ஐரோப்​பிய நாடு​கள் இடையி​லான வர்த்​தகத்தை பன்​மடங்கு அதி​கரிக்​கச் செய்​யும்.

கைகோக்​கும் ஐரோப்பா பிரதமர் மோடி​யின் ஐரோப்​பிய நாடு​கள் பயணம் குறித்து யூரோ நியூஸ் ஊடகம் வெளி​யிட்ட செய்​தி​யில், “ஐரோப்​பா​வின் மிக நெருங்​கிய நட்பு நாடு​கள் (அமெரிக்​கா) எங்​களை விட்டு வில​கிச் செல்​கின்​றன.

இந்த நேரத்​தில் இந்​தியா உடனான நட்​புறவு மிகுந்த முக்​கி​யத்​து​வம் பெற்று உள்​ளது. சர்​வ​தேச அரங்​கில் இந்​தி​யா​வின் செல்​வாக்கு தொடர்ந்து உயர்ந்து வரு​ம் நிலையில், பாது​காப்​பு, வர்த்​தகம் சார்ந்த துறை​களில் இந்​தி​யா​வுடன் கைகோத்து செயல்பட ஐரோப்​பிய நாடு​கள் முடிவு செய்​துள்​ளன” என கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT