கோப்புப்படம்

 
இந்தியா

பிரதமர் மோடி பெருமை தேடவே 100 நாள் வேலை திட்ட பெயர் மாற்றம்: காங். மூத்த தலைவர் விமர்சனம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை​வாய்ப்பு உறுதி (100 நாள்) திட்​டத்​தின் பெயரை மாற்​றும் மசோ​தாவுக்கு மத்​திய அமைச்​சரவை நேற்று முன்​தினம் ஒப்​புதல் அளித்​தது.

இதன்படி, இனி இந்த திட்​டம் ‘பூஜ்ய பாபு கிராமின் ரோஜ்கர் யோஜ​னா’ என்று அழைக்​கப்​படும். வேலை நாட்​களின் எண்​ணிக்கை 100-ல் இருந்து 125 நாட்​களாக அதி​கரிக்​கப்​பட உள்​ளது.

இதுகுறித்து காங்​கிரஸ் கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் கே.சி.வேணுகோ​பால் நேற்று கூறிய​தாவது: ஒரு காலத்​தில் தோல்​வி​யின் சின்​னம் என்று இந்த திட்டத்தை பிரதமர் அழைத்​தார். இப்​போது அந்த புரட்​சிகர​மான திட்​டத்​துக்கு பெருமை தேடிக்​கொள்​ளும் நோக்​கில் அதன் பெயரை மாற்​றுகிறார். இது இந்​தி​யா​வின் ஆன்மா குடி​யிருக்​கும் கிராமங்​களில் இருந்து மகாத்மா காந்​தியை அழிப்​ப​தற்​கான மற்​றொரு வழி.

இந்த நடவடிக்​கை, இந்த திட்​டம் வேண்​டுமென்றே புறக்​கணிக்கப்​படு​வதை மூடிமறைப்​ப​தற்​கான ஒரு வெற்று ஒப்​பனை மாற்​றத்தை தவிர வேறில்​லை. மேலும் இந்த திட்​டத்​துக்கு மெது​வான மரணத்தை ஏற்​படுத்​து​வதற்​காக கவன​மாகத் திட்​ட​மிடப்​பட்ட ஓர் உத்​தி​யாக இது தெரி​கிறது. உண்​மை​யில், இந்த அரசுக்​கு நலத்​திட்​டங்​கள் வழங்​கும் நோக்​கம் இல்​லை. இவ்​வாறு அவர்​ கூறி​யுள்​ளார்.

SCROLL FOR NEXT