இந்தியா

சக்திவாய்ந்த தலைவர்களில் மோடிக்கு 2-ம் இடம்: லோவி இன்ஸ்டிடியூட் ஆய்வறிக்கையில் தகவல்

ஆசிய பிராந்தியத்தின் 3-வது பெரிய வல்லரசு இந்தியா

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஆசி​யாவின் 3-வது பெரிய வல்​லரசாக இந்​தியா விளங்​கு​வ​தாகவும் மிகவும் சக்தி வாய்ந்த தலை​வர்​களில் பிரதமர் மோடி 2-ம் இடத்​தில் இருப்​ப​தாகவும் லோவி ஆய்​வறிக்கை கூறுகிறது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சிந்​தனை அமைப்​பான லோவி இன்ஸ்டி​டியூட், ‘ஆசிய அதி​கார குறியீடு 2026’ என்ற பெயரில் வருடாந்​திர ஆய்​வறிக்​கையை வெளி​யிட்​டுள்​ளது.

இந்த அறிக்கை 27 நாடுகள் மற்​றும் பிராந்​தி​யங்​களை, 131 அம்​சங்​கள் மூலம் மதிப்​பீடு செய்​கிறது. இது பொருளாதா​ரம் மற்​றும் ராணுவத் திறன், மீள்​தன்மை, தூதரகத் தாக்​கம், எதிர்​கால வளங்​கள், பாது​காப்பு அமைப்​பு​கள் மற்​றும் பொருளாதார உறவு​கள் ஆகிய எட்டு அதி​கார அளவீடுகளை உள்​ளடக்​கியது.

இதன்​படி, ஆசி​யாவின் மிகவும் சக்தி வாய்ந்த நாடுகள் பட்​டியலில் அமெரிக்கா, சீனா​வுக்கு அடுத்​த​படி​யாக, 40.5 புள்​ளி​களு​டன் இந்​தியா 3-வது இடத்தை தக்​கவைத்​துக் கொண்​டுள்​ளது. அமெரிக்கா ஆசிய நாடு இல்லை என்​றாலும், இந்தோ-பசி​பிக் பிராந்​தி​யத்​தில் ஆதிக்​கம் செலுத்​து​வ​தால் இந்​தப் பட்​டியலில் இடம்​பி​டித்​துள்​ளது.

தென்​கிழக்கு ஆசிய நாடுகளு​டனான ராணுவ உறவு​கள் (பிரம்​மோஸ் ஏவு​கணை விற்​பனை), கலாச்​சா​ரத் தாக்​கம், எதிர்​கால வளங்​கள் மற்​றும் நிலை​யான வெளி​யுறவுக் கொள்கை வலு​வான பொருளாதா​ரக் கணிப்பு மற்​றும் பிரதமர் நரேந்​திர மோடி​யின் திறமையான தலைமை ஆகிய​வையே இதற்​குக் காரணம் என அந்த அறிக்கை கூறுகிறது. மேலும், சீன அதிபர் ஜி ஜின்​பிங்​குக்கு அடுத்​த​படி​யாக, ஆசி​யாவின் மிகவும் திறமையான பிராந்​தி​யத் தலை​வர்​கள் பட்​டியலில் பிரதமர் மோடி 2-ம் இடத்​தில் உள்​ள​தாக அந்த அறிக்கை கூறுகிறது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT