இந்தியா

தங்கம், எரிபொருள் பயன்பாட்டைக் குறைத்த மக்கள் - ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மேற்​காசிய போர் காரணமாக எரிபொருள் சிக்கனம், தங்கம் வாங்குவதை குறைத்த மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரி​வித்​தார்.

பிரதமர் மோடி மாதந்​தோறும் கடைசி ஞாயிற்​றுக்​கிழமை வானொலியில் மன் கி பாத் (மன​தின் குரல்) நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் உரை​யாற்றி வரு​கிறார். இந்த நிகழ்ச்​சி​யின் 135-வது பகுதி நேற்று ஒலிபரப்​பப்​பட்​டது. அதில் பிரதமர் நரேந்திர மோடி பேசி​யுள்​ள​தாவது: உலகளா​விய பொருளா​தார நெருக்​கடி மற்​றும் மேற்​காசி​யப் பதற்​றத்​திற்கு மத்​தி​யில், இந்​தி​யப் பொருளா​தா​ரத்​தைப் பாது​காக்​கும் நோக்​கில் பொது​மக்​கள் அளித்து வரும் பேராதரவு பெரிதும் பாராட்​டுக்​குரியது.

மேற்​காசி​யா​வில் நிலவி வரும் போர்ச் சூழலைக் கருத்​தில் கொண்​டே, தங்​கம் வாங்​கு வதைத் தவிர்க்​கு​மாறும், எரிபொருள் பயன்​பாட்டை குறைக்​கு​மாறும் கேட்​டுக்​கொண்​டேன். எனது இந்த அழைப்பை ஏற்​று, முழு ஒத்​துழைப்பு வழங்கி வரும் ஒவ்​வொரு குடிமக​னுக்​கும் எனது மனமார்ந்த நன்றி.

தின​மும் ஒரே திசை​யில், ஒரே பகு​திக்​குத் தங்​களின் தனித்​தனி வாக​னங்​களில் சென்று வந்​தவர்​கள், இப்​போது ஒன்​றிணைந்து ஒரே வாக​னத்​தில் பயணிக்​கும் நல்ல பழக்​கத்​தைத் தொடங்​கி​யுள்​ளனர். இது எரிபொருள் சேமிப்​புக்கு வித்​திட்​டுள்​ளது. அதேபோன்​று, பல குடும்​பங்​கள் தங்​கள் வீட்​டுத் திரு​மணங்​களுக்​குக் கூடப் புதி​தாகத் தங்​கம் வாங்​கு​வதைத் தவிர்த்​துள்​ளனர். அவசரத் தேவைக்​கு, தங்​களின் பழைய நகைகளையே புதிய வடிவ​மைப்​பில் மாற்​ற தொடங்​கி​யுள்​ளனர்.

மக்​களின் பங்​களிப்​பும் பொருளா​தார மாற்​ற​மும் குறித்து தங்​களின் அனுபவங்​களை சமூக வலைத்​தளங்​கள் மூல​மாக மக்​கள் பகிர்ந்து வரு​கின்​றனர். இந்த ஜூன் மாதத்தில் தான் விமானத்துறையிலும் கூட, தேசம் பெரிய வெற்றியை ஈட்டியிருக்கிறது. சி-295 என்ற இந்த விமானம் முழு​வது​மாக இந்​தி​யா​விலேயே தயாரிக்​கப்​பட்​டது, மேலும் இந்த சி-295 விமானம் தனது முதல் வான் பயணத்தை நிறைவு செய்​திருக்​கிறது.

இப்​படி 40 விமானங்​கள் பாரதத்​திலேயே தயாரிக்​கப்​பட்டு வரு​கின்​றன. இதனால் சிறுகுறுநடுத்​தரத் தொழில்​துறை மற்​றும் வான்​வெளித்​துறைக்கு புதிய சக்தி கிடைத்​திருக்​கிறது. வேலை​வாய்ப்​புக்​கான சந்​தர்ப்​பங்​கள் அதி​கரித்து வரு​கின்​றன. விநாயகர் சதுர்த்​தி​ அன்று நிறு​வப்​படும் திரு​வுரு​வச் சிலைகள் நமது தேசத்​தின் மண்​ணால் உரு​வாக்​கப்​பட்​ட​வை​யாக, நமதுமண்​பாண்​டம் தயாரிப்​போ​ரால், உள்​ளூர் கைவினைக்​கலைஞர்​களால் உரு​வாக்​கப்​பட்​ட​தாக இருக்க வேண்​டும். பிளாஸ்​டர் ஆஃப் பேரிஸால் தயாரிக்​கப்​பட்ட திரு​வுரு​வச் சிலைகளைக் கண்​டிப்​பாக மக்​கள் வாங்க வேண்​டாம். இவ்​வாறு பிரதமர் நரேந்திர மோடி​ பேசி​னார்​.

SCROLL FOR NEXT