இந்தியா

வளர்ச்சி அடைந்த நாட்டை உருவாக்கும் முக்கிய தூண் யுபிஎஸ்சி: 100-வது ஆண்டு தினத்தில் பிரதமர் மோடி புகழாரம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க மிக முக்கிய தூணாக யுபிஎஸ்சி செயல்படுகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஆங்​கிலேயர் ஆட்​சிக் காலத்​தின்​போது கடந்த 1926-ம் ஆண்டு அக்​டோபர் 1-ம் தேதி பொது சேவை தேர்​வாணை​யம் தொடங்​கப்​பட்​டது. நாடு சுதந்​திரம் அடைந்த பிறகு கடந்த 1950-ம் ஆண்டு இந்த அமைப்​பு, மத்​திய அரசு பணி​யாளர் தேர்​வாணை​யம் (யுபிஎஸ்​சி) என்று பெயர் மாற்​றம் செய்​யப்​பட்​டது.

இதன்​படி யுபிஎஸ்சி அமைப்​பின் 100-வது ஆண்டு தினம் நேற்று கொண்​டாடப்​பட்​டது. இதையொட்டி டெல்​லி​யில் உள்ள பாரத் மண்​டபத்​தில்நடை​பெற்ற விழா​வில் பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்​றார். அப்​போது அவர் பேசி​ய​தாவது: தற்​போது யுபிஎஸ்​சி-​யின் 100-வது ஆண்டு விழாவை கொண்​டாடு​கிறோம்.

லட்​சக்கணக்​கான இந்​தி​யர்​களின் கனவு​களை யுபிஎஸ்சி நனவாக்கி வரு​கிறது. இந்த அமைப்​பின் மீது மக்​கள் அசைக்க முடி​யாத நம்​பிக்​கையை வைத்து உள்​ளனர். மாணவர்​களின் நலன் கருதி கால​தாமதம் இன்றி போட்​டித் தேர்​வு​களை நடத்த வேண்​டும். காலத்​துக்கு ஏற்ப தேர்வு நடை​முறை​களில் சீர்த்​திருத்​தங்​களை அமல்​படுத்த வேண்​டும்.

கடந்த 1952-ம் ஆண்டு புள்​ளி​ விவரங்​களின்​படி குடிமைப் பணி சேவை​யில் 3 சதவீத பெண்​கள் மட்​டுமே இருந்​தனர். தற்​போது 30 சதவீத பெண்​கள் குடிமைப் பணி சேவை​யில் உள்​ளனர். யுபிஎஸ்சி அமைப்​புக்கு இது​வரை 4 பெண்​கள் தலை​மைப் பொறுப்பை ஏற்று உள்​ளனர். கடந்த காலங்​களை ஒப்​பிடும்​போது யுபிஎஸ்சி தேர்வு எழுது​வோரின் எண்​ணிக்கை 45 சதவீதம் வரை அதி​கரித்து உள்​ளது.

நடப்பு 21-ம் நூற்​றாண்​டில் கால் பகு​தியை கடந்​து​விட்​டோம். அடுத்த 25 ஆண்​டு​கள் மிக​வும் முக்​கிய​மானது. வரும் 2047-ம் ஆண்​டில் வளர்ச்சி அடைந்த இந்​தி​யாவை உரு​வாக்க வேண்​டும். அதற்கு அனைத்து தரப்பு மக்​களும் ஒன்​றிணைந்து அயராது உழைக்க வேண்​டும்.

யுபிஎஸ்சி மூலம் தேர்​வாகும் அரசு ஊழியர்​கள் நாட்​டின் நலன், மக்​களின் நலனை முன்​னிறுத்தி செயல்பட வேண்​டும். மக்​களின் வாழ்க்​கைத் தரத்தை மேம்​படுத்த வேண்​டும். நாடு முழு​வதும் திறன்​வாய்ந்த அரசு ஊழியர்​களை யுபிஎஸ்சி தேர்வு செய்து வரு​கிறது.

இதன்​மூலம் வளர்ச்சி அடைந்த இந்​தி​யாவை உரு​வாக்க இந்த அமைப்பு மிக முக்​கிய தூணாக செயல்​படு​கிறது. அரசு சேவை​களைப் பெற பல வாரங்​கள் காத்​திருப்​பதை மக்​கள் விரும்​ப​வில்​லை.

இன்​றைய சூழலில் செயற்கை நுண்​ணறிவு தொழில்​நுட்​பம் சில நிமிடங்​களில் ஆயிரக்​கணக்​கான தரவு​களை ஆய்வு செய்து அளிக்​கிறது.

எனவே அரசு துறை​களில் செயற்கை நுண்​ணறிவு தொழில்​நுட்​பத்தை முழு​மை​யாகப் பயன்​படுத்தி பொது​மக்​களுக்கு விரை​வாக சேவை வழங்க வேண்​டும்.

அதே​நேரம் செயற்கை நுண்​ணறிவு தொழில்​நுட்​பத்​தின் மூலம் போலி வீடியோக்​கள், புகைப்​படங்​கள், போலி செய்​தி​கள் பரப்​பப்​படு​வது உள்​ளிட்ட பல்​வேறு சவால்​களும் எழுந்​துள்​ளன. இந்த சவால்​களை​யும் திறம்பட எதிர்​கொள்ள வேண்​டும்.

யுபிஎஸ்சி தேர்​வாணை​யம் இளைஞர்​களின் அறி​வுத் திறனை சோதித்து அரசுப் பணிக்கு அவர்​களை தேர்வு செய்​கிறது. அதோடு அவர்​கள் எந்த நோக்​கத்​துக்​காக அரசுப் பணி​யில் சேரு​கிறார்​கள் என்​ப​தை​யும் யுபிஎஸ்சி கண்​டறிய வேண்​டும்.

மக்​கள் சேவை​யில் அவர்​களுக்கு ஆர்​வம் இருக்​கிறதா என்​ப​தைக் கண்​டறிவது மிக​வும் அவசி​யம். மக்​கள் குரலே, மகேசன் குரல் என்ற கொள்​கை​யின் அடிப்​படை​யில் மத்​திய அரசு செயல்​படு​கிறது.

மக்​களுக்கு சேவை செய்​வதே அரசு ஊழியர்​களின் தலை​யாய பணி​யாக இருக்க வேண்​டும்​. இவ்​வாறு பிரதமர்​ நரேந்​திர மோடி பேசி​னார்​.

SCROLL FOR NEXT