இந்தியா

ஏஐ மாநாட்டு பிரமுகர்களுக்கு பிரதமர் சிறப்பு விருந்து

செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லியில் நடைபெறும் ஏஐ உச்சி மாநாட்​டில் பங்​கேற்ற உலகத் தலை​வர்​களுக்கு பிரதமர் நரேந்​திர மோடி மிகுந்த அக்​கறை​யுடன் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட ஒவ்​வாமை இல்​லாத மதிய உணவை நேற்று முன்​தினம் வழங்​கி​னார்.

ஏஐ உச்சி மாநாடு டெல்​லி​யில் உள்ள பாரத் மண்​டபத்​தில் கடந்த திங்​கட்​கிழமை தொடங்​கியது. இந்த மாநாடு இன்றுடன் முடிவடைகிறது. மாநாட்டில் பிரான்ஸ் உட்பட பல்​வேறு நாடு​களின் தலை​வர்​கள், நூற்​றுக்​கும் மேற்​பட்ட நிறு​வனங்​களின் தலைமை செயல் அதி​காரி​கள் பங்​கேற்​றுள்​ளனர்.

          

இந்த மாநாட்​டின் 4-ம் நாளான நேற்று முன்​தினம் ஐ.நா. பொதுச் செய​லா​ளர் அந்​தோனியா குத்​தேரஸ், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்​ரான் உள்​ளிட்ட உலகத் தலை​வர்​கள் மற்​றும் கூகுள் நிறு​வனத்​தின் சுந்​தர் கே.பிச்​சை, ஓபன்ஏஐ நிறு​வனத்​தின் சாம் ஆல்ட்​மேன் உள்​ளிட்ட சிஇஓக்​கள் பங்​கேற்​றனர். இவர்​களுக்கு பாரத் மண்​டபத்​தில் மதி​யம் பிரதமர் நரேந்​திர மோடி சிறப்பு விருந்து அளித்​தார்.

ஒவ்​வாமை ஏற்​ப​டாத வகை​யில் பால், கோதுமை அல்​லது உலர் கொட்​டைகள் இல்​லாமல் இவை தயாரிக்​கப்​பட்​டிருந்​தன. சர்​வ​தேச பிர​தி​நி​தி​களுக்​காக மிகுந்த கவன​முடன் மெனு தேர்ந்​தெடுக்​கப்​பட்​டிருந்​தது. அதேவேளை​யில் நம் நாட்​டின் வளமான சமையல் பாரம்​பரி​யத்தை எடுத்​துக் காட்​டு​வ​தாக இது இருந்​தது. தினை, பருப்​பு, தாமரை தண்​டு, பாஸ்​மதி அரிசி, குங்​குமப்பூ போன்ற பொருட்​கள் பயன்​படுத்​தப்​பட்டு முற்​றி​லும் சைவ உணவு பரி​மாறப்​பட்​டது.

ஆரோக்​கி​யத்​துக்கு முக்​கி​யத்​து​வம் தரப்​பட்ட அதே வேளை​யில் இந்​தி​யா​வின் பிராந்​திய சுவை​களை விருந்​தினர் அனுபவிக்​கும் வகை​யில் இவை தயாரிக்​கப்​பட்​டிருந்​தன.

உ.பி. மற்​றும் பிஹாரில் பிரபல​மான நிமோனா கேபப், காஷ்மீரின் நட்ரு குர்​குரி, ஹைத​ரா​பாத்​தின் ஜாஃப்​ரானி சப்​ஸ் புலாவ் உள்​ளிட்ட உணவு​கள் மற்​றும் பல வகை சாலட்​கள் மற்​றும்​ இனிப்​பு​கள்​ பரி​மாறப்​பட்​டன.

SCROLL FOR NEXT