இந்தியா

நாம் ஒன்றிணைந்து மகளிர் சக்தியை வலுப்படுத்துவோம்! - பிரதமர் நரேந்திர மோடி

Guest Author

பிரதமர் நரேந்திர மோடி எழுதிய சிறப்புக் கட்டுரை இங்கே...

இந்​தியா முழு​வதும் பிஹு, விஷு, வைசாகி மற்​றும் தமிழ்ப் புத்தாண்டு என விழாக் ​கோலம் பூண்​டுள்ள இவ்​வேளை​யில், மக்கள் அனை​வருக்​கும் எனது இதயங்​க​னிந்த வாழ்த்​துகளை தெரிவித்துக் கொள்​கிறேன்.

இந்த நன்​னாளில் புதுப்​பித்​தல் உணர்வு நம்மை நிரப்​புவது போல, இந்​திய ஜனநாயகம் ஒரு புதிய வரலாற்​றுப் பாதை​யில் பயணிக்கத் தயா​ராகி​விட்​டது. குறிப்​பாக, ஏப்​ரல் 11 அன்று மகாத்மா ஜோதிபா பூலே​வின் 200-வது பிறந்​த​நாள் மற்​றும் ஏப்​ரல் 14 அன்று பாபா ​சாகேப் அம்​பேத்​கர் பிறந்​த​நாள் வரவுள்ள நிலையில், சமத்​து​வம் நோக்​கிய நமது பயணம் கூடு​தல் முக்கியத்து​வம் பெறுகிறது.

          

இதன் ஒரு பகு​தி​யாக, ஏப்​ரல் 16 அன்று நாடாளு​மன்​றம் மீண்​டும் கூட​வுள்​ளது. மகளிர் இட ஒதுக்​கீடு சட்ட மசோ​தாவை விவா​தித்து நிறைவேற்​று​வதே இந்​தக் கூட்​டத்​தொடரின் முதன்​மை​யான நோக்​க​மாகும். இதை ஒரு சட்​ட​மியற்​றும் கடமை​யாக மட்​டும் பார்க்​காமல், தேசத்​தின் மக்​கள் தொகை​யில் சரி​பா​தி​யாக இருக்கும் பெண்​களின் கனவு​களை நனவாக்​கும் ஒரு புனித​மான வாய்ப்​பாக நாம் கருத வேண்​டும். இன்று விண்​வெளி முதல் பாதுகாப்​புப் படைகள் வரை இந்​தி​யப் பெண்​கள் நிகரற்ற சாதனை​களைப் படைத்து வரு​கின்​றனர்.

கல்​வி, சுகா​தா​ரம், நிதி உள்​ளடக்​கத்​தில் நாம் மேற்​கொண்டு வரும் சீர்​திருத்​தங்​கள் அவர்​களின் முன்​னேற்​றத்​துக்கு வலு​வான அஸ்​தி​வாரமிட்​டுள்​ளன. இருப்​பினும், நிர்​வாகத்​தி​லும் கொள்கை முடி​வெடுக்​கும் தளங்​களி​லும் பெண்​களின் பங்​களிப்பு இன்​னும் அவர்​களின் தகு​திக்கு ஏற்ற அளவில் அமைய​வில்லை என்​பது நிதர்​சனம். அதி​காரத்​தில் பெண்​கள் பங்​கேற்​கும்​போது, அவர்​கள் ஒரு புதிய பார்​வையை​யும், சமூகத்​தின் ஆழமான சிக்​கல்​களைத் தீர்க்​கும் தெளி​வான அனுபவங்​களை​யும் கொண்டு வரு​கிறார்கள்.

2029 மக்​கள​வைத் தேர்​தலும், அதற்கு முன்​பாக வரும் சட்டப்பேரவைத் தேர்​தல்​களும் மகளிர் இட ஒதுக்​கீட்​டுடன் நடைபெறச் செய்​வது நமது ஜனநாயகக் கடமை​யாகும். கடந்த பல தசாப்​தங்​களாகப் பல முயற்​சிகள் எடுக்​கப்​பட்​டும், ஒரு​மித்த கருத்து ஏற்​ப​டாத​தால் இந்த இலக்கை நாம் அடைய முடி​யாமல் போனது. ஆனால், செப்​டம்​பர் 2023-ல் நாடாளு​மன்​றம் மகளிர் இடஒதுக்​கீடு சட்​டத்தை நிறைவேற்​றியது எனது வாழ்​வின் மிகச் சிறந்த தருண​மாகும். அதை முழு​மை​யாகச் செயல்​படுத்​து​வ​தில் ஏற்​படும் ஒவ்​வொரு நொடி தாமத​மும், நமது ஜனநாயக வலுவூட்டலில் ஏற்​படும் தாமத​மாகும்.

நமது அரசி​யல் சாசனத்தை உரு​வாக்​கிய பெண் உறுப்பினர்களின் கனவை நிறைவேற்​ற​வும், சமூக நீதியை நிலை​நாட்​ட​வும் இதுவே சரி​யான தருணம். இது ஒரு குறிப்​பிட்ட அரசாங்கத்​தின் அல்​லது அரசி​யல் கட்​சி​யின் வெற்றி அல்ல; இது ஒட்​டுமொத்த தேசத்​தின் வெற்​றி. எனவே, அனைத்து அரசி​யல் கட்சிகளும், நாடாளு​மன்ற உறுப்​பினர்​களும் கட்சி எல்லைகளைக் கடந்​து, தேச நலன் கருதி இந்த முன்​னெடுப்​புக்கு ஆதர​வளிக்க வேண்​டும் என உருக்​க​மாக வேண்​டு​கோள் விடுக்கிறேன்.

ஒற்​றுமையே இந்​தி​யா​வின் பலம். அந்த ஒற்​றுமை​யின் மூலம், நீண்​ட​ கால​மாக விவா​திக்​கப்​பட்டு வந்த இந்த மாற்​றத்தை இப்போது நனவாக்​கு​வோம். இந்​தி​யப் பெண்​களின் கைகளில் அதி​காரத்தை ஒப்​படைப்​ப​தன் மூலம், வலிமை​யான மற்​றும் அனை​வரை​யும் உள்​ளடக்​கிய புதிய இந்​தி​யா​வைக் கட்டமைப்போம். நமது மகளிர் சக்​தியை வலுப்​படுத்​து​வது, எதிர்காலத்​ தலை​முறைக்​கு நாம்​ செய்​யும்​ மகத்​தான தொண்டாகும்​.

SCROLL FOR NEXT