இந்தியா

‘திருஷ்டி’ செயற்கைக் கோளை விண்ணுக்கு அனுப்பியது கேலக்ஸ்-ஐ

பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இரவு நேரத்​தி​லும், மேக கூட்​டத்​தி​லும் தெளி​வாக படம் பிடிக்​கும் ‘திருஷ்டி’ செயற்கை கோளை, கேலக்​ஸ்-ஐ என்ற இந்​திய ஸ்டார்ட் அப் நிறு​வனம் விண்​ணுக்கு அனுப்​பி​யுள்​ளது.

இந்​திய ஸ்டார்ட்​- அப் நிறு​வனம் கேலக்​ஸ்-ஐ ‘திருஷ்டி’ என்ற புவி கண்​காணிப்பு செயற்கை கோளை ஸ்பேஸ் எக்ஸ் நிறு​வனத்​தின் ‘ஃபல்​கன் 9’ ராக்​கெட் மூலம் விண்​ணுக்கு நேற்று அனுப்​பியது. இதில் மல்​டிஸ்​பெக்ட்​ரல் கேமரா (Multispectral camera) மற்​றும் சின்தெடிக் அபார்ச்​சர் ரேடார் (SAR) இமேஜர் ஆகிய இரண்​டும் பொருத்தப்​பட்​டுள்​ளன. இதனால் இந்த செயற்​கைக் ​கோள், மேகக்​கூட்​டங்​கள் மற்​றும் இருளை ஊடுருவி மிக தெளி​வான படங்​களை எடுத்து பூமிக்கு அனுப்​பும்.

இதனால் இது இந்​திய செயற்​கைக்​ கோள்​களில் தனித்​து​வ​மானது. இதன் தரவு​கள் உளவுத் தகவல்​களுக்கு பயன்​படுத்​தப் ​படலாம் என்​ப​தால், இந்த செயற்கை கோள் பாகிஸ்​தான் மற்​றும் சீனாவுக்கு புது தலை​ வலி​யாக அமை​யும் என கூறப்​படு​கிறது.

இது குறித்து கேலக்​ஸ்-ஐ நிறு​வனத்​தின் தலைமை நிர்​வாக அதிகாரி சுயாஷ் சிங் கூறிய​தாவது: திருஷ்டி செயற்​கைக் ​கோளுக்​கான யோசனை இந்​தி​யா​வின் புவி​யியல் மற்​றும் கால நிலையை அடிப்​படை​யாகக் கொண்டு உரு​வானது. இந்​தியா ஒரு வெப்​ப மண்டல நாடு. மேற்​கத்​திய நாடு​களை விட இங்கு மேகங்கள் அதி​கம். மேற்​கத்​திய நாடு​கள் இந்​தச் சிக்​கலை எதிர்​கொண்​ட​தில்​லை. இங்கு மேகமூட்​டம் அடிக்​கடி மற்​றும் நீண்ட காலம் நீடிக்​கும் என்​ப​தால், வழக்​க​மான ஆப்​டிகல் செயற்​கைக்​கோள்​கள் பெரும்​பாலும் பலனற்​ற​தாகி விடு​கின்​றன.

எந்​தவொரு நேரத்​தி​லும் பூமி​யின் நிலப்​பரப்​பில் 70 சதவீதம் மேகங்​களால் மூடப்​பட்​டிருக்​கும். கடல் பகு​தி​களில் இது 90 சதவீதமாக இருக்​கும். எனவே, குறிப்​பாக வெப்​ப மண்​டலப் பகுதிகளில் பத்து படங்​களில் ஏழு படங்​கள் மேகமூட்​டத்​துடனேயே இருக்​கும். செயற்​கைக்​ கோள் தரவு​களைப் பயன்படுத்துபவர்​களுக்கு மேகங்​கள் வெறும் இடையூறு மட்டுமல்ல, அவை ஒரு திரையைப் போன்​றது. தெளி​வான படங்கள் கிடைக்​காது.

பேரிடர் மேலாண்​மை, விவ​சா​யம், உள்​கட்​டமைப்பு கண்காணிப்பு அல்​லது பாது​காப்பு போன்ற பணி​களுக்கு தெளி​வான படங்​கள் மிக​வும் அவசி​யம். இதற்​காகவே மேகங்​களை ஊடுரு​விப் பார்த்து துல்​லிய​மான தகவல்​களைப் பெறும் தொழில்​நுட்​பத்தை கேலக்ஸ்-ஐ உரு​வாக்​கி​யுள்​ளது. திருஷ்டி செயற்​கைக் கோளில் உள்ள மல்​டிஸ்​பெக்ட்​ரல் கேமரா மற்​றும் சின்​தெடிக் அபார்ச்​சர் ரேடார் இமேஜர் எதை​யும், எல்​லா​வற்​றை​யும் ஊடுரு​விப் பார்க்​கும் திறன் பெற்​றது. இவ்​வாறு அவர் கூறி​னார். இந்த சாதனையை பிரதமர் மோடி பாராட்டி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற செயற்​கை கோள் ஏற்கெனவே இருந்​திருந்​தால், ‘ஆபரேஷன் சிந்​தூர்' நடவடிக்​கை​களின் போது குண்​டு​ வீச்​சி​னால் பாகிஸ்​தானில் ஏற்​பட்ட சேதங்​களை மதிப்​பிட, அமெரிக்​கா​வின் வணிக ரீதி​யான செயற்​கைக் ​கோள்​களைச் சார்ந்​திருக்​காமல், இந்​தி​யாவே தரமான படங்​களைப் பெற்​றிருக்க முடி​யும். தற்போது இந்​தி​யா​விடம் இந்த செயற்​கைக் ​கோள் உள்​ளது பாகிஸ்​தான் மற்​றும் சீனா​வுக்​கு புதி​ய தலை ​வலியை ஏற்படுத்தலாம்​ என கூறப்​படுகிறது.

SCROLL FOR NEXT