பிரதமர் நரேந்திர மோடி 6 நாள் வெளிநாட்டுப் பயணமாக நேற்று பிரான்ஸ் புறப்பட்டுச் சென்றார். ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் பல்வேறு உலகத் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். படம்: பிடிஐ

 
இந்தியா

6 நாள் பயணமாக பிரதமர் மோடி பிரான்ஸ் பயணம்: ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: பி​ரான்​ஸ், ஸ்லோவேக்​கியா ஆகிய நாடு​களில் பயணம் மேற்​கொள்​வதற்​காக பிரதமர் நரேந்​திர மோடி நேற்று டெல்​லி​யில் இருந்து புறப்​பட்​டுச் சென்​றார். அவர் இந்​தப் பயணத்​தில் ஜி7 உச்சி மாநாட்​டில் பங்​கேற்​கிறார்.

பிரதமர் நரேந்​திர மோடி பிரான்​ஸ், ஸ்லோவேக்​கியா ஆகிய ஐரோப்​பிய நாடு​களில் 6 நாட்​கள் அரசு முறைப் பயணம் மேற்​கொள்​கிறார். அவரது பிரான்ஸ் பயணம் 2 கட்​டங்​களாகப் பிரிக்​கப்​பட்​டுள்​ளது. இரண்​டுக்​கும் இடைப்​பட்ட காலத்​தில் அவர் ஸ்லோவேக்​கி​யா​வில் பயணம் மேற்​கொள்​வார். பிரதமர் மோடி தனது முதல்​கட்ட பிரான்ஸ் பயணத்​தில் அந்​நாட்டு அதிபர் இமானுவேல் மேக்​ரானுடன் நீஸ் நகரில் இன்று (ஜூன் 14) இருதரப்பு பேச்​சு​வார்த்தை நடத்​துகிறார்.

ஸ்லோவேக்​கி​யா​வில் பயணம்: இந்​தி​யா, பிரான்ஸ் மற்​றும் பிற நாடு​களைச் சேர்ந்த முன்​னணி ஸ்டார்ட்​-அப்​கள் மற்​றும் வென்​சர் கேபிடல் நிதி​யங்​களை ஒன்​றிணைக்​கும் 'பாரத் இன்​னோவேட்​ஸ்' நிகழ்ச்சியை இரு தலை​வர்​களும் கூட்​டாக தொடங்கி வைக்க உள்​ளனர். பிரதமர் மோடி ஜூன் 14, 15-ல் ஸ்லோவேக்​கி​யா​வுக்கு பயணம் மேற்​கொள்​கிறார். அந்​நாட்​டுப் பிரதமர் ராபர்ட் ஃபிகோ மற்​றும் அதிபர் பீட்​டர் பெல்​லக்​ரினியைச் சந்​தித்து இருதரப்பு உறவு​களை மேம்​படுத்​து​வது குறித்து விவா​திக்​கிறார்.

மீண்​டும் பிரான்ஸ் திரும்​பும் மோடி, ஜூன் 16, 17 ஆகிய தேதி​களில் எவி​யான் நகரில் நடை​பெறும் ஜி7 உச்சி மாநாட்​டில் கலந்து கொள்​கிறார். அங்கு அவர் ஜி7 நாடு​களின் தலை​வர்​கள் மற்​றும் மாநாட்​டுக்கு அழைக்​கப்​பட்ட நட்பு நாடு​களின் தலை​வர்​கள் மற்​றும் சர்​வ​தேச அமைப்​பு​களின் தலை​வர்​களு​டன் கருத்​துகளைப் பகிர்ந்து கொள்​வார்.

இந்த உச்சி மாநாட்​டுக்கு இடையே, உலகத் தலை​வர்​களு​டன் இருதரப்பு பேச்​சு​வார்த்​தை​யும் பிரதமர் மோடி மேற்​கொள்​வார். பயணத்​தின் இறுதி நாளான ஜூன் 18-ம் தேதி பிரதமர் மோடி பாரிஸ் நகருக்கு சென்று அங்​குள்ள இருதரப்பு நிகழ்ச்​சி​களில்பங்​கேற்​பதுடன், ஐரோப்​பா​வின் மிகப்​பெரிய தொழில்​நுட்​பம் மற்​றும் ஸ்டார்ட்​-அப் நிகழ்ச்​சி​யான ‘வி​வாடெக்’ உச்சி மாநாட்​டிலும் கலந்து கொள்​கிறார். மேலும், பிரான்ஸ் தலைநகரில் வாழும் இந்​திய வம்​சாவளி​யினர் மத்​தி​யிலும் உரை​யாற்​று​வார்.

பிரதமர் அறிக்கை: பிரதமர் மோடி தனது இரு நாட்​டுப்பயணத்தை நேற்று தொடங்​கு​வதற்கு முன் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: ஜி7 அமைப்​பில் இந்​தியா பங்​கேற்​பது, நம் நாட்​டின் மீது நமது கூட்​டாளி​கள் கொண்​டுள்ள நம்​பிக்​கை​, உலக அரங்​கில் வளர்ந்து வரும் நமது முக்​கி​யத்​து​வத்​தை பிர​திபலிக்​கிறது.

ஜி7 மாநாட்​டுக்கு இந்​தியா அழைக்​கப்​படு​வது இது 8-வது முறை​யாகும். ஜி7 மாநாட்​டில், இந்​தியா தனக்​காக மட்​டும் பேசாமல் குளோபல் சவுத் நாடு​களின் எதிர்​பார்ப்​பு​களை​யும் உலகுக்கு எடுத்​துரைக்​கும். பிரான்ஸ் மற்​றும் ஸ்லோவேக்​கியா குடியரசுக்​கான எனது பயணம், ஐரோப்பா மற்​றும் ஜி7 நாடு​களு​டன் இந்​தி​யா​வின் ஆழமான உறவை மேலும் வலுப்​படுத்​தும் என்​ப​தில் நான் உறு​தி​யாக இருக்​கிறேன். மேலும் ஐரோப்பா கண்​டத்​துட​னும் அதற்கு அப்​பாலும் நமது கூட்​டாண்​மையை விரிவுபடுத்​து​வ​தில் நமக்​குள்ள உறு​தி​யான அர்ப்​பணிப்பை இது வெளிப்​படுத்​தும்.

கடந்த 1993-ல் ஸ்லோவேக்​கியா சுதந்​திரம் பெற்ற பிறகு இந்​தி​யப் பிரதமர் ஒரு​வர் அங்கு செல்​வது இதுவே முதல் முறை என்​ப​தால், இந்த வரலாற்​றுச் சிறப்​புமிக்க பயணம் இருதரப்பு உறவு​களின் வளர்ச்​சியை அடுத்த கட்​டத்​துக்கு எடுத்​துச் செல்​லும் என நம்​பு​கிறேன். பிராட்​டிஸ்​லாவா நகரில் ஸ்லோவேக்​கியா அதிபர் பீட்​டர் பெல்​லக்​ரினி, பிரதமர் ராபர்ட் ஃபிகோ ஆகியோ​ருடன் பேச்​சு​வார்த்தை நடத்​து​வதுடன், தொழில்​துறை தலை​வர்​களு​ட​னும் கலந்​துரை​யாட உள்​ளேன்.

ஜூன் 18-ல் பாரிஸில் அதிபர் மேக்​ரானுடன் இணைந்து ‘வி​வாடெக் 2026’ நிகழ்​வில் பங்​கேற்​கிறேன். பாரிஸில் வாழும் துடிப்​புமிக்க இந்​திய வம்​சாவளி​யினரை சந்​திக்​க​வும் நான் திட்​ட​மிட்​டுள்​ளேன். இந்​தியா - பிரான்​ஸ் இடையே ஒரு வாழும் பால​மாக அவர்​கள் விளங்கி வரு​கின்​றனர்​. இவ்​வாறு பிரதமர்​ நரேந்திர மோடி கூறியுள்​ளார்​.

SCROLL FOR NEXT