இந்தியா

“ஊரக வேலை திட்டத்தை சீர்குலைக்கிறார் பிரதமர் மோடி” - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

ரேபரேலி: மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்​தி, தனது மக்​களவை தொகு​தி​யான ரேபரேலிக்கு நேற்று சென்​றார்.

அங்கு கட்​சித் தொண்​டர்​களிடையே அவர் கூறிய​தாவது: மத்​திய அரசு ‘மகாத்மா காந்தி ஊரக வேலை உறு​தித் திட்​டத்​தின்' பெயரை மாற்​றியதன் மூலம் அந்​தத் திட்​டத்தை அவம​தித்​துள்​ளது. மிக முக்​கிய​மாக, விளிம்​புநிலை மக்​களுக்கு இத்​திட்​டம் வழங்கி வந்த பாது​காப்பை அரசு திரும்​பப் பெற்​றுள்​ளது. இது ஜனநாயகத்​தின் வேர்​கள் மீதான தாக்​குதலாகும். இதன் மூலம் இந்த திட்​டத்தை பிரதமர் மோடி சீர்​குலைக்​கிறார்.

          

மகாத்மா காந்தி ஊரக வேலை உறு​தித் திட்​டத்​தைப் பாது​காக்க காங்​கிரஸ் நாடு தழு​விய இயக்​கத்தை நடத்தி வரு​கிறது. நாங்​கள் தொழிலா​ளர்​களின் பக்​கம் நிற்​கிறோம், அவர்​களின் உரிமை​களைப் பாது​காக்க உறு​தி​யுடன் இருக்​கிறோம்.

ஆனால், நாட்​டின் செல்​வம் முழு​வதும் கவுதம் அதானி மற்​றும் முகேஷ் அம்​பானி ஆகிய இரு தொழில​திபர்​களின் கைகளில் மட்​டுமே குவிய வேண்​டும் என்று பிரதமர் விரும்​பு​கிறார். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார். முன்​ன​தாக, ரேபரேலி​யில் நடை​பெற்ற கிரிக்​கெட் போட்டி ஒன்றை ராகுல் காந்தி தொடங்கி வைத்​தார்.

SCROLL FOR NEXT