கேரள சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 9-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் திருச்சூரில் நேற்று நடைபெற்ற சாலைப் பேரணியில் பங்கேற்ற பிரதமர் மோடி. உடன் இணையமைச்சர் சுரேஷ் கோபி.

 
இந்தியா

மக்கள் ஆசியுடன் கேரளத்தில் பாஜக ஆட்சி: பிரதமர் மோடி உறுதி

செய்திப்பிரிவு

பாலக்காடு: கேரள மாநில சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நெருங்கி வரும் சூழலில், பாலக்​காட்​டில் ஞாயிற்​றுக்​கிழமை நடை​பெற்ற பிரம்​மாண்ட பிரச்​சா​ரப் பொதுக்​கூட்​டத்​தில் பிரதமர் மோடி பேசி​ய​தாவது:

கேரள மாநில அரசி​யலில் தற்​போது ஒரு புதிய மாற்​றம் ஏற்​பட்​டுள்​ளது. மாநிலத்​தின் இளைஞர்​கள், பெண்​கள் மற்​றும் விவ​சா​யிகள் என அனைத்​துத் தரப்​பினரும் பாஜக மற்​றும் என்​டிஏகூட்​ட​ணி​யின் மீது மிகுந்த நம்​பிக்கை கொண்​டுள்​ளனர். தொண்​டர்​களின் அயராத உழைப்​பு, அவர்​களின் தியாகம் மற்​றும் மக்​களின் ஆசி ஆகிய​வற்​றின் மூலமே கேரளத்​தில் இந்த மாற்​றம் சாத்​தி​ய​மாகி​யுள்​ளது.

          

நீண்​ட​கால​மாக ஆளும் இடது​சாரி ஜனநாயக முன்​னணி (எல்​டி.எஃப்) மற்​றும் எதிர்க்​கட்​சி​யான ஐக்​கிய ஜனநாயக முன்​னணி (யுடிஎஃப்) ஆகிய கூட்​ட​ணி​களின் சுயநல அரசி​யலில் கேரள மாநிலம் சிக்​கித் தவிக்​கிறது.

காங்​கிரஸ் மற்​றும் இடது​சா​ரி​கள் வெளி​யில் ஒரு​வரை ஒரு​வர் தாக்​கிப் பேசிக் கொண்​டாலும், உண்​மை​யில் அவர்​கள் ஒரு நாண​யத்​தின் இரு பக்​கங்​களைப் போன்​றவர்​கள். இந்​தத் தேர்​தலில் அவர்​களுக்கு உண்​மை​யான சவாலாகத் திகழ்​வது பாஜக மட்​டுமே.

கேரளத்​தின் கடன் சுமை தற்போது ரூ.5 லட்​சம் கோடியைத் தாண்​டி​யுள்​ளது. கடந்த பத்து ஆண்​டுகளில் மாநிலத்​தின் கடன் மூன்று மடங்​குக்​கும் மேலாக அதி​கரித்​துள்​ளது கவலை​யளிக்​கிறது.

ஊழல்​வா​தி​களிடம் இருந்து பணத்தை மீட்​டு, அதனை மாநிலத்​தின் வளர்ச்​சிப் பணி​களுக்கு என்​டிஏ அரசு பயன்​படுத்​தும். மக்​களின் முழு​மை​யான ஆதர​வுடன் கேரளத்​தில் நிச்​ச​யம் நாங்​கள் ஆட்​சி​யமைப்​போம்​. இவ்​வாறு பிரதமர்​ மோடி பேசி​னார்​.

SCROLL FOR NEXT