டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் செய்தியாளர்களுக்கு நேற்று பேட்டியளித்த பிரதமர் மோடி மற்றும் பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா. படம்: பிடிஐ

 
இந்தியா

மோடி, சில்வா சந்திப்பு: இந்தியா, பிரேசில் வர்த்தகத்தை ரூ.1.81 லட்சம் கோடியாக உயர்த்த இலக்கு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: அடுத்த 5 ஆண்​டு​களில் இந்​தி​யா, பிரேசில் இருதரப்பு வர்த்​தகத்தை ரூ.1.81 லட்​சம் கோடி​யாக உயர்த்த இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ள​தாக பிரதமர் நரேந்திர மோடி தெரி​வித்​துள்​ளார்.

அரசு முறைப் பயண​மாக இந்​தியா வந்​துள்ள பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுாலா டா சில்வாவுக்கு, குடியரசுத் தலை​வர் மாளி​கை​யில் நேற்று உற்​சாக வரவேற்பு அளிக்​கப்​பட்​டது.

          

பின்​னர், டெல்லியில் உள்ள ஹைத​ரா​பாத் இல்லத்தில் சில்​வா​வும், இந்தியப் பிரதமர் நரேந்​திர மோடி​யும் சந்​தித்​துப் பேசினர். இந்த சந்திப்பின்போது இருதரப்பு உறவை மேலும் பலப்​படுத்​து​வது மற்​றும் சர்​வ​தேச அரசி​யல் நில​வரம் குறித்து இரு தலை​வர்​களும் விரி​வாக ஆலோ​சனை நடத்​தி​ய​தாகக் கூறப்​படு​கிறது. மேலும், டிஜிட்டல், அரிய வகை கனிமங்​கள் மற்​றும் ஸ்டீல் விநி​யோகம் ஆகிய 3 துறை​களில் இணைந்து செயல்படு​வது தொடர்​பாக புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்கள் கையெழுத்​தாகின.

இந்த சந்​திப்​புக்​குப் பிறகு இரு தலை​வர்​களும் செய்​தியாளர்​களுக்கு கூட்​டாக பேட்டி அளித்​தனர். அப்போது பிரதமர் நரேந்திர மோடி கூறிய​தாவது: அதிபர் லுாலா​வின் தொலை நோக்​குப் பார்வை மற்​றும் ஊக்​கமளிக்​கும் தலை​மை​யால் இந்​தியா மற்​றும் பிரேசில் இடையி​லான உறவு நீண்டகால​மாகப் பயனடைந்​துள்​ளது. மேலும், லத்​தீன் அமெரிக்​கா​வில் இந்​தி​யா​வின் மிகப்​பெரிய வர்த்​தகப் பங்​காளி​யாக பிரேசில் விளங்​கு​கிறது.

இந்​தி​யா, பிரேசில் நாடு​களுக்கு இடையி​லான வர்த்தகத்தை அடுத்த 5 ஆண்​டு​களில் ரூ.1.81 லட்​சம் கோடிக்​கும் மேலாக உயர்த்த இலக்கு நிர்​ண​யித்துள்ளோம். குறிப்பாக, அரிய வகை கனிமங்​கள் மற்றும் பாது​காப்​புத் துறை​களில் இணைந்து செயல்​டு​வது குறித்து ஆலோ​சித்​தோம்.

தீவிர​வாத அமைப்​பு​களும், அவற்​றுக்கு ஆதரவு அளிப்​பவர்​களும் ஒட்​டுமொத்த மனிதகுலத்​தின் எதிரி​கள் என்​ப​தில் இரு நாடு​களும் ஒரே கருத்​தைக் கொண்​டுள்​ளன. எனவே, அவற்​றுக்கு எதி​ரான போரில் இரு நாடு​களும் இணைந்து செயல்​படு​வது என்று முடிவு எடுத்​துள்​ளோம்.

இந்​தியா மற்​றும் பிரேசில் இணைந்து செயல்​படும்போது, ‘குளோபல் சவுத்' எனப்​படும் வளரும் நாடு​களின் குரல் உலக அரங்​கில் வலுவடை​யும். இவ்வாறு பிரதமர் மோடி தெரி​வித்​தார்.

இரு சக்திகளின் சந்திப்பு: பிரேசில் அதிபர் சில்வா கூறும்​போது, “எனது அன்பி​ற்​குரிய நண்​பர் மோடி அவர்​களே, 6-வது முறை​யாக இந்த நாட்​டுக்​கு நான் வந்​துள்​ளது, எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. இந்​தி​யா​வுக்​கும், பிரேசிலுக்​கும் இடையி​லான இந்​தச் சந்​திப்பு மிகச்​ சிறந்த இரு சக்​தி​களின் சந்​திப்​பாகும்.

நாம் ‘குளோபல் சவுத்' அமைப்​பின் 2 மிகப்​ பெரிய ஜனநாயக நாடு​கள் மட்​டுமல்ல, இதுஒரு டிஜிட்​டல் வல்​லரசுக்​கும் (இந்​தி​யா), புதுப்​பிக்​கத்​தக்க எரிசக்தி வல்​லரசுக்கும் (பிரேசில்) இடையி​லான சந்​திப்​பாகும். நாம் இரு​வருமே பன்​முகத்​தன்மை கொண்ட நாடு​கள் மற்​றும் கலாச்​சா​ரத் தொழில் துறை​யின் மையங்​கள். மேலும், நாம் இரு​வருமே பலதரப்பு உறவு​களை​யும் அமை​தி​யை​யும்​ ஆதரிக்​கிறோம்​" என்​றார்​.

SCROLL FOR NEXT