இந்தியா உட்பட அனைத்து நாடுகளுக்கும் கூடுதலாக 10% வரி விதிப்பு: ட்ரம்ப் அறிவிப்பு

வாஷிங்டனில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிபர் டொனால்டு ட்ரம்ப். படம்: ஏஎப்பி

வாஷிங்டனில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிபர் டொனால்டு ட்ரம்ப். படம்: ஏஎப்பி

Updated on
2 min read

வாஷிங்டன்: இந்​தியா உட்பட அனைத்து நாடு​களுக்​கும் கூடு​தலாக 10 சதவீதம் வரி விதிக்​கப்​படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறி​வித்​துள்​ளார்.

கடந்த ஆண்டு ஜனவரி​யில் அமெரிக்க அதிப​ராக டொனால்டு ட்ரம்ப் பதவி​யேற்​றார். பின்​னர், கடந்த ஏப்​ரலில் 100-க்​கும் மேற்​பட்ட நாடு​களுக்கு புதிய வரிவி​கிதங்​களை அவர் அறி​வித்​தார். இதை எதிர்த்து அமெரிக்​கா​வின் 12 குறு, சிறு நிறு​வனங்​கள் மற்​றும் ஜனநாயக கட்சி ஆட்சி நடத்​தும் 12 மாகாண அரசுகள் சார்​பில் சர்​வ​தேச வர்த்தக நீதி​மன்​றத்​தில் வழக்​குத் தொடரப்​பட்​டது.

இந்த வழக்​கில், அதிபர் ட்ரம்​பின் புதிய வரி விதிப்பை ரத்து செய்து நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்துப் பெடரல் சர்க்​யூட் நீதி​மன்​றத்​தில் அமெரிக்க அரசுமேல்​முறை​யீடு செய்​தது. அங்​கும் ட்ரம்ப்​பின் புதிய வரி​வி​திப்பு செல்​லாது என்று தீர்ப்​பளிக்​கப்​பட்​டது.

இதை எதிர்த்து கடந்த ஆண்டு நவம்​பரில் உச்ச நீதி​மன்​றத்​தில் அமெரிக்க அரசு மேல்​முறை​யீடு செய்​தது. தலைமை நீதிபதி ராபர்ட்ஸ் தலை​மையி​லான 9 நீதிப​தி​கள் அமர்வு வழக்கை விசா​ரித்​து, நேற்று முன்​தினம் தீர்ப்புவழங்​கியது. தலைமை நீதிபதி உட்பட 6 நீதிப​தி​கள், ட்ரம்​ப்பின் வரி விதிப்பு செல்​லாது என்​றும், 3 நீதிப​தி​கள் வரி விதிப்பு செல்​லும் என்​றும் தீர்ப்​பளித்​தனர். பெரும்​பான்மை நீதிப​தி​களின் தீர்ப்​பின் அடிப்​படை​யில் புதிய வரிவிதிப்பு ரத்து செய்​யப்​பட்​டுள்​ளது.

அதிபர் ட்ரம்ப் அறி​விப்பு: உச்ச நீதி​மன்​றத் தீர்ப்பு வெளி​யான 3 மணி நேரத்​தில் அதிபர் டொனால்டு ட்ரம்ப் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது:

உச்ச நீதி​மன்​றத்​தின் தீர்ப்பு மிகுந்த அதிருப்தி அளிக்​கிறது. சில வெளி​நாட்டு சக்​தி​களின் சதி​யால் உச்ச நீதி​மன்​றம் எதிர்​மறை​யாக தீர்ப்பு வழங்​கி​யிருக்​கிறது. சில நீதிப​தி​கள் முட்​டாள்​கள்​போல செயல்​பட்​டுள்​ளனர்.

அவர்​களுக்கு தேசப்​பற்று இல்லை.எனினும் 3 நீதிப​தி​கள் அமெரிக்​கா​வின் நலனை முன்​னிறுத்தி தீர்ப்பு வழங்கி உள்​ளனர். அவர்​களை மனதா​ரப் பாராட்​டு​கிறேன். நான் விதித்த பரஸ்பர வரி விதிப்பை மீண்​டும் அமல்​படுத்​துதற்​கான மாற்று வழிகள் குறித்து தீவிர​மாக ஆலோ​சித்து வரு​கிறேன்.

முதல்​கட்​ட​மாக, அதிபரின் சிறப்பு அதி​காரத்​தைப் (சட்​டப்பிரிவு 122) பயன்​படுத்தி அனைத்து நாடு​களுக்​கும் கூடு​தலாக 10 சதவீத வரி விதிக்​கப்​படு​கிறது. ஏற்​கெனவே வசூலித்த வரியை திருப்பி வழங்​கு​வது குறித்து உச்ச நீதி​மன்​றம் எந்த உத்​தர​வை​யும் பிறப்​பிக்​க​வில்​லை. எனவே, அமெரிக்க அரசு ஏற்​கெனவே வசூலித்த வரிப் பணத்தை எந்த நிறு​வனத்​துக்​கும் திரும்ப வழங்​காது. இவ்​வாறு அதிபர் ட்ரம்ப் தெரி​வித்​தார்.

இந்​தி​யா​வுக்கு 13.5% வரி: அதிபர் ட்ரம்​பின் புதிய வரி விதிப்​புக்கு முன்​பாக இந்​தி​யப் பொருட்​களுக்கு அமெரிக்க அரசு 10 சதவீத வரியை விதித்​திருந்​தது.

எனினும், அமெரிக்கா​வுக்கு மிக​வும் விருப்​ப​மான நாடு என்ற அந்​தஸ்து காரண​மாக இந்​தி​யப் பொருட்​களுக்கு 3.5 சதவீத வரி மட்​டுமே வசூலிக்​கப்​பட்டு வந்​தது. இந்​நிலை​யில், கடந்த ஆகஸ்ட் மாதம் இந்​தி​யப் பொருட்​களுக்கு 25 சதவீத வரியை அமெரிக்கா விதித்​தது.

தொடர்ந்​து, ரஷ்​யா​விடம் இருந்து கச்சா எண்​ணெய் வாங்​கு​வ​தாக குற்​றம்​சாட்டி மேலும் 25 சதவீத வரி விதிக்​கப்​பட்​டது. ஒட்​டுமொத்​த​மாக இந்​தி​யப் பொருட்​களுக்கு அமெரிக்க அரசு 50 சதவீத வரியை விதித்து வந்​தது. இந்த மாத தொடக்​கத்​தில் இந்​தி​யப் பிரதமர் மோடி​யும், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்​பும் தொலைபேசி​யில் முக்​கியப் பேச்​சு​வார்த்தை நடத்​தினர்.

இதையடுத்​து, அதிபர் ட்ரம்ப் சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில், “இந்​தி​யப் பொருட்​கள் மீதான வரி 18 சதவீத​மாகக் குறைக்​கப்​படும்" என்று அறி​வித்​தார். இது தொடர்​பாக இரு நாடு​களிடையே மார்ச் மாதம் வர்த்தக ஒப்​பந்​தம் கையெழுத்​தாகும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

இந்த சூழலில், அமெரிக்க உச்ச நீதி​மன்​றத்​தின் தீர்ப்​பால் இந்​தியா உட்பட அனைத்து நாடு​களுக்​கும் அமெரிக்​கா​வின் பழைய வரி விதிப்பு நடை​முறை அமலுக்கு வந்​துள்​ளது. இதன்​படி, இந்​தி​யப் பொருட்​களுக்கு 3.5 சதவீத வரி மட்​டுமே விதிக்​கப்பட வேண்​டும்.

எனினும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று முன்​தினம் புதி​தாக அறி​வித்த 10 சதவீத வரி விதிப்பு பிப். 24-ம் தேதி முதல் அமலுக்கு வரு​கிறது. இதன்​படி, பழைய 3.5 சதவீத வரி, புதிய 10 சதவீத வரி என இந்​தி​யப் பொருட்​களுக்கு 13.5 சதவீத வரி விதிக்​கப்​படும் என்று அமெரிக்க அதிபர் மாளிகை வட்​டாரங்​கள் தெரி​வித்​துள்​ளன. அதே​நேரத்​தில், இது தொடர்​பாக அமெரிக்க அரசுத் தரப்​பில் அதி​காரப்​பூர்​வ​மாக எந்த அறி​விப்​பும் வெளி​யிடப்​பட​வில்​லை.

மத்​திய அரசு கருத்து: அமெரிக்க உச்ச நீதி​மன்​றத் தீர்ப்பு குறித்து மத்​திய தொழில், வணி​கத் துறை அமைச்​சர் பியூஷ் கோயல் நேற்று கூறிய​தாவது: அமெரிக்க உச்ச நீதி​மன்​றம் வழங்​கிய தீர்ப்பை மத்​திய அரசு கவனத்​தில் கொண்​டுள்​ளது. இது தொடர்​பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிருபர்​களுக்கு பேட்டி அளித்​துள்​ளார்.

அமெரிக்க அரசு சில நடவடிக்​கைகளை மேற்​கொண்டு வரு​கிறது. இந்த நடவடிக்​கைகள் மற்​றும் இதனால்​ ஏற்​படக்​ கூடிய விளைவு​கள்​ குறித்​து ஆய்​வு செய்​து வரு​கிறோம். இவ்​வாறு அவர் கூறினார்.

<div class="paragraphs"><p>வாஷிங்டனில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிபர் டொனால்டு ட்ரம்ப். படம்: ஏஎப்பி</p></div>
ட்ரம்பின் வரி விதிப்பை எதிர்த்து நீதிமன்றத்தில் வெற்றி பெற்ற இந்திய வழக்கறிஞர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in