இந்தியா

மொஹரம் ஊர்வலத்தில் 15,000 பேரை கொல்ல சதி: மனைவியை பிரிந்ததால் விரக்தியில் திட்டமிட்டதாக விசாரணையில் அம்பலம்

செய்திப்பிரிவு

மும்பை: கடந்த வெள்​ளிக்​கிழமை மாலை மும்பை டோங்​ரி​யில் உள்ள நூர் பாக் பகு​தி​யில் இருந்து ரஹ்மத் பாக் மயானம் நோக்கி மொஹரம் மத ஊர்​வலம் நடை​பெற்​றது.

இதில் பங்கேற்றவர்களுக்கு உடல் வலியைக் குறைக்​கும் வலி நிவாரணி எனக் கூறி சில கேப்​சூல் மாத்​திரைகளை ஒருவர் விநியோகித்​துள்​ளார். இது தொடர்பான புகாரின் பேரில் பயாஸ் பிரேம்ஜி என்​பவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதில் பல அதிர்ச்​சி​யூட்​டும் தகவல்​கள் வெளி​யாகி உள்ளன.

ப​யாஸ் பிரேம்​ஜிக்கு கடந்த 2 ஆண்​டு​களுக்கு முன்பு மனைவியுடன் விவாகரத்து ஆகி​யுள்​ளது. இதனால் ஏற்​பட்ட கடுமை​யான மன உளைச்​சலில், ஒட்​டுமொத்த உலகமே தனக்கு எதி​ராகத் திரும்​பி​விட்​ட​தாக அவர் கரு​தி​யுள்​ளார். இந்​தத் தனிப்பட்ட விரக்​தி​யின் காரண​மாக, உலகைப் பழி​வாங்க முடி​வெடுத்​து, மொஹரம் ஊர்​வலத்​தில் பங்​கேற்​கும் சுமார் 15,000 மக்களைக் கொல்​வதற்​குத் திட்​ட​மிட்​ட​தாக அவர் காவல்​ துறையினரிடம் ஒப்​புக்​கொண்டுள்​ளார்.

விசா​ரணை​யின்​போது , பயாஸின் தாயாரும், சகோ​தரி​யும் தற்போது ஈரானில் வசித்து வரு​வது தெரிய​வந்​துள்​ளது. எனவே, இச்சதித் திட்​டத்​தின் பின்​னணி​யில்​ ஏதேனும்​ சர்​வ​தேசத்​ தொடர்பு​கள்​ இருக்​கிற​தா என்​ப​தைக்​ கண்​டறிய, அவருடைய அலைபேசி தடய அறி​வியல்​ சோதனைக்​​காக அனுப்பப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT