உச்ச நீதிமன்றம் | கோப்புப்படம் 
இந்தியா

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரி வழக்கு: மத்திய அரசு, தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: தமிழகத்​தில் செயற்​கை​யாக இடைத்​தேர்​தல் நடை​பெற வழிவகுத்​த​தாகக் கூறப்​படும் தொகுதி​களில், தேர்​தல் நடத்​து​வதற் கான செல​வினங்​களை சம்​பந்​தப்​பட்ட வேட்​பாளர்​களிட​மிருந்து வசூலிக்​கக் கோரிய வழக்​கில், மத்​திய அரசு, இந்​தி​யத் தேர்​தல் ஆணை​யம் உள்​ளிட்​டோர் பதிலளிக்க உச்ச நீதி​மன்​றம் நோட்​டீஸ் பிறப்​பித்​துள்​ளது.

இது​தொடர்​பாக கே.சுதன் என்​பவர் தாக்​கல் செய்த மேல்​முறையீட்டு மனுவில், அரசி​யல் சுய​லாபத்​துக்​காகவோ அல்​லது கட்சி மாறு​வதற்​காகவோ எம்​எல்ஏ-க்​கள் தங்​களது பத​வி​களைத் தானாக ராஜினாமா செய்​யும்​போது, அங்கு செயற்​கை​யான இடைத்​தேர்​தல்​கள் திணிக்​கப்​படு​கின்​றன.

இவ்​வாறான இடைத்​தேர்​தல்​களால் மக்​களின் வரிப்​பணம் பெரு​மளவில் வீணாகிறது. எனவே, இதுபோன்ற தேவையற்ற இடைத்​தேர்​தல் செல​வினங்​களை அரசு ஏற்​காமல், பதவிவில​கிய முன்​னாள் எம்​எல்​ஏக்​களிட​மிருந்தே முழு​மையாக வசூலிக்க வேண்​டும் எனக் கோரி​யிருந்​தார்.

இந்த மனு உச்​ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிப​தி​கள் ஜாய் மால்யா பக் ஷி, வி.மோகனா ஆகியோர் அடங் கிய அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது, இடைத்​தேர்​தல் செல​வினங்​கள் தொடர்​பான கூடுதல் ஆவணங்​களைத் தாக்​கல் செய்ய வேண்​டி​யிருப்​ப​தால், வழக்கை ஒரு வாரத்​துக்கு தள்​ளிவைக்க வேண்​டும் என மனுதா​ரர்தரப்​பில் கோரப்​பட்​டது. குறிப்​பாக, இடைத்​தேர்​தல்​ செல​வினங்​களை​யும் மனுவில் சேர்க்க இருப்ப​தாகத் தெரி​விக்​கப்​பட்​டது.

இதையடுத்து, இந்த வழக்​கில் மத்​திய அரசு, இந்​தி​யத் தேர்​தல் ஆணை​யம், தமிழக சட்​டப்​பேரவைச் செய​லா​ளர், தமிழ்​நாடு தலை​மைச் செய​லா​ளர் மற்​றும் அதிமுக​வில் இருந்து வெற்றி பெற்று பின்​னர் பத​வியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்த சத்​தி​யபாமா, மரகதம் குமரவேல், இசக்கி சுப்​பையா, சி.விஜயபாஸ்​கர்,எம்.ஆர்.விஜய பாஸ்​கர், ஜெயக்குமார் உள்​ளிட்​டோருக்கு நோட்​டீஸ் பிறப்​பித்து, வழக்கை நவ.11-க்கு தள்​ளி வைத்து நீதிப​தி​கள் உத்​தர​விட்​டனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT