இந்தியா

ஹரித்வாரில் இறைச்சி கடைகள் இடம் மாற்ற திட்டம்

செய்திப்பிரிவு

டேராடூன்: உத்​த​ராண்ட் மாநிலம் ஹரித்​வாரில் 2027, ஜனவரி 14-ம் தேதி மகர சங்​கராந்தி நாளில் அர்த்த கும்​பமேளா தொடங்க உள்ளது. இங்கு கங்கை நதிக் கரைகளில் 6 ஆண்​டுக்கு ஒரு​முறை நடை​பெறும் இந்த நிகழ்​வில் லட்​சக்​கணக்​கானோர் புனித நீராடு​வார்கள்.

இது தொடர்​பாக ஹரித்​வார் மேயர் கிரண் ஜெயஸ்​வால் கூறும்போது, ‘‘அர்த்த கும்பமேளாவை முன்​னிட்​டு, இறைச்​சிக் கடைகளை நகருக்கு வெளியே சராய் கிராமத்​துக்கு இடமாற்​றம் செய்ய வரைவுத் திட்​டம் தயாரிக்​கப்​பட்​டுள்​ளது. இத்​திட்​டம் மாநகராட்சி ஒப்புதல் பெற்று நிறைவேற்றப்படும்’’ என்றார்.

          
SCROLL FOR NEXT