புதுடெல்லி: மத்திய கலாச்சார அமைச்சகம் “தாமரை ஒளி: ஞானம் பெற்றவரின் நினைவுச் சின்னங்கள்” என்ற தலைப்பில் கலாச்சார கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
இதில், போற்றப்படும் புனித பிப்ரஹ்வா நினைவுச் சின்னங்களும், அதனுடன் தொடர்புடைய முக்கிய தொல்பொருட்களும் காட்சிப்படுத்தப்பட உள்ளன. இந்த கண்காட்சி புத்தரின் போதனைகளுடன் இந்தியாவில் நீடித்த நாகரிகத் தொடர்பையும், அதன் செழுமையான ஆன்மீக பாரம்பரியத்தையும் பாதுகாத்து வெளிப்படுத்துவதில் உள்ள இந்தியாவின் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டு காட்டும்.
இந்த கண்காட்சியை பிரதமர் மோடி ஜனவரி 3-ம் தேதி டெல்லியில் உள்ள ராய் பித்தோரா கலாச்சார வளாகத்தில் தொடங்கி வைக்கிறார். இந்தக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படும் நினைவுச்சின்னங்களில், மகத்தான வரலாற்று, தொல்லியல் மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த, திரும்ப தாயகம் கொண்டுவரப்பட்ட புனித நினைவுச்சின்னங்களும் அடங்கும்.