புதுடெல்லி: கடந்த 4-ம் தேதி தாய்லாந்தின் புக்கேட் நகரில் இருந்து ஏர் இந்தியா விமானம் டெல்லிக்கு புறப்பட்டது. இதில் 137 பயணிகள், விமானிகள் உட்பட 8 ஊழியர்கள் பயணம் செய்தனர். நடுவானில் விமானம் பறந்தபோது திடீரென 300 அடிக்கு கீழே இறங்கியது. இதனால் விமானம் குலுங்கி, நிலை தடுமாறியது. இதில் விமானத்தில் இருந்த 13 பயணிகள், 4 ஊழியர்கள் காயமடைந்தனர்.
இதில் தலைமை விமானி கஞ்சா போதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்து விமானப் போக்குவரத்து துறை தரப்பில் அதிகாரப்பூர்வமாக எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை.