இந்தியா

ஆந்திராவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு

செய்திப்பிரிவு

அமராவதி: ஆந்​தி​ரா​வில் கடந்த ஒரு வார​மாக பெட்​ரோல், டீசலுக்கு தட்​டுப்​பாடு நில​வு​கிறது. குறிப்​பாக டீசல் தட்​டுப்​பாடு அதி​கரித்து வரு​கிறது. இதனால் கனரக வாகன போக்​கு​வரத்து பாதிக்​கப்​பட்டுள்​ளது. சில இடங்​களில் பெட்​ரோல் நிலை​யங்​கள் மூடப்​பட்டுள்​ளன. இதனால் மக்​கள் பெரிதும் பாதிக்​கப்​பட்டு உள்ளனர்.

இது தொடர்​பாக ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு நேற்று முக்​கிய ஆலோ​சனை நடத்​தி​னார். தலைமை செயலர் சாய்​பிர​சாத் மற்​றும் மூத்த அதி​காரி​கள், அமைச்​சர்​களு​டன் அமராவ​தி​யில் அவர் அவசர ஆலோ​சனை நடத்​தி​னார். சம்​பந்​தப்​பட்ட மாவட்ட ஆட்​சி​யர்​களு​டன் கலந்​தாலோ​சித்து உடனடி​யாக பிரச்​சினையை தீர்க்க வேண்​டும் என்று அதி​காரி​களுக்கு முதல்​வர் உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT