வழிகாட்டி நெறிமுறைகளை அமல்படுத்துவதற்கு ஐசியூ பிரிவுக்குச் செயல் திட்டங்கள் தயாரிக்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

வழிகாட்டி நெறிமுறைகளை அமல்படுத்துவதற்கு ஐசியூ பிரிவுக்குச் செயல் திட்டங்கள் தயாரிக்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்
Updated on
1 min read

புதுடெல்லி: ‘‘தீ​விர சிகிச்​சைப் பிரிவு​களுக்​கான (ஐசி​யூ) வழி​காட்டி நெறி​முறை​களை அமல்​படுத்​து​வதற்​கு, செயல் திட்​டங்​களை தயாரிக்க வேண்​டும்’’ என்று அனைத்து மாநிலங்​களை​யும் உச்ச நீதி​மன்​றம் அறி​வுறுத்தி உள்​ளது.

மருத்​து​வ​மனை​களில் தீவிர சிகிச்சை பிரி​வில் (ஐசி​யூ) நோயாளி​களுக்​குச் தரமான சிகிச்சை அளிப்​பதை உறுதி செய்ய வழி​காட்டி நெறி​முறை​களை வகுக்க வேண்​டும் என்​பது தொடர்​பான வழக்கு உச்ச நீதி​மன்​றத்​தில் நடை​பெற்று வரு​கிறது. இந்த வழக்கு கடந்த ஏப்​.20-ம் தேதி உச்ச நீதி​மன்​றத்​தில் மீண்​டும் விசாரணைக்கு வந்​தது. நீதிப​தி​கள் அசனுதீன் அமானுல்லா மற்​றும் ஆர்​.ம​காதேவன் ஆகியோர் அடங்​கிய அமர்வு விசா​ரணை நடத்​தியது. அப்​போது மத்​திய அரசு சார்​பில் ஐசி​யூ.​வில் சிகிச்சை அளிப்​ப​தற்​கான வழி​காட்டி நெறி​முறை​கள் சமர்ப்​பிக்​கப்​பட்​டது.

பின்​னர் நீதிப​தி​கள் தங்​கள் உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது: ஐசி​யூ.​வில் நோயாளி​களுக்கு சிகிச்சை அளிக்​கும் விஷ​யத்​தில், முதல் கட்​ட​மாக போதிய ஊழியர்​கள் எண்​ணிக்​கை, அத்​தி​யா​வசிய கருவி​கள் உட்பட 5 அடிப்​படைப் பிரச்​சினை​களை அடை​யாளம் கண்​டு, அவற்​றுக்கு முன்​னுரிமை அளிக்க வேண்​டும். ஐசி​யூ.​வில் அமல்​படுத்த வேண்​டிய வழி​காட்டி நெறி​முறை​களை மத்​திய சுகா​தா​ரத் துறை சமர்ப்​பித்​துள்​ளது. அதன் நகல்​களை அனைத்து மாநிலங்​கள் மற்​றும் யூனியன் பிரதேசங்​களுக்கு மத்​திய அரசு அளிக்க வேண்​டும். அத்​துடன், அனைத்து மாநில, யூனியன் பிரதேசங்​களைச் சேர்ந்த கூடு​தல் தலைமைச் செயலர்​கள், சுகா​தா​ரத் துறை மற்​றும் மருத்​து​வக் கல்​வித் துறை செயலர்​கள் உடனடி​யாக கூட்​டத்தை கூட்ட வேண்​டும். அதில், ஐசி​யூ.​வில் கடைபிடிக்​கப்பட வேண்​டிய வழி​காட்டி நெறி​முறை​களை அமல்​படுத்​து​வது தொடர்​பாக துறை சார்ந்த நிபுணர்​களு​டன் அவர்​கள் ஆலோ​சனை நடத்த செயல் திட்​டத்தை வகுக்க வேண்​டும்.

ஐசி​யூ.​வில் அளிக்​கப்பட வேண்​டிய சிகிச்​சைகள் குறித்த செயல் திட்​டங்​களை வகுக்க வேண்​டும். அதை விட முக்​கிய​மானது, அந்த செயல் திட்​டங்​கள் அமல்​படுத்​து​வதை தீவிர​மாகக் கண்​காணிக்க வேண்​டும். இந்த நடை​முறை​களை முதல் கூட்​டத்​திலேயே உடனடி​யாக செய்ய வேண்​டும் என்று நாங்​கள் எதிர்​பார்க்​கிறோம். இன்று முதல் (ஏப்​.20) ஒரு வாரத்​துக்​குள் இதற்​கான செயல் திட்​டத்தை வகுக்க வேண்​டும்.

ஐசி​யூ.​வில் பணி​யாற்​றும் நர்​ஸ்​களுக்கு முறை​யான பயிற்சி அளிக்​கப்பட வேண்​டும். ஆனால், 24 மணி நேர​மும் ஐசி​யூ.​வில் பணி​யாற்​றும் நர்​ஸ்​கள், நோயாளி​களுக்கு ஏற்​படும் எந்த சிக்​கலை​யும் சமாளிக்​கும் வகை​யில் பயிற்சி பெற வேண்​டும்.

இந்த நீதி​மன்​றத்​தில் மத்​திய சுகா​தா​ரத் துறை சமர்ப்​பித்த வழி​காட்டி நெறி​முறை​களை, மத்​திய அரசின் சுகா​தா​ரத் துறை அமைச்​சகத்​தின் இணை​யதளத்​தில் பதிவேற்​றம் செய்ய வேண்​டும். இவ்​வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், அடுத்த வி​சா​ரணை​யை மே மாதம்​ 18-ம்​ தேதிக்​கு தள்​ளி வைத்​தனர்​.

வழிகாட்டி நெறிமுறைகளை அமல்படுத்துவதற்கு ஐசியூ பிரிவுக்குச் செயல் திட்டங்கள் தயாரிக்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்
டெல்லியில் சிறுவனைக் கொன்ற வழக்கில் தலைமறைவானவர் 31 ஆண்டுக்குப் பிறகு கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in