இந்தியா

குடியரசுத் தலைவர், பிரதமரின் ஏஐ வீடியோ வெளியிட்டவர் கைது

செய்திப்பிரிவு

பாட்னா: ஒரு வீடியோ​வில் ஒரு​வரின் முகத்​துக்கு பதிலாக வேறு ஒரு​வரின் முகத்தை பொருத்தி ஏஐ தொழில்​நுட்​பம் மூலம் போலி வீடியோக்​கள் (டீப்ஃபேக்) உரு​வாக்க முடி​யும். இதன் மூலம் ஒரு​வர் சொல்​லாததை சொன்​னது போல​வும் செய்​யாததை செய்​தது போல​வும் போலி​யாக காண்​பிக்க முடி​யும்.

இந்​நிலை​யில் குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு மற்​றும் பிரதமர் நரேந்​திர மோடி​யின் டீப்ஃபேக் வீடியோக்​கள் மற்​றும் ஆடியோக்​களை உரு​வாக்​கி, பரப்​பிய​தாக பிஹாரின் முசாபர்​பூர் மாவட்​டம், பகவான்​பூரை சேர்ந்த பிரமோத் குமார் ராஜ் என்​பவரை போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர்.

இதுகுறித்து முசாபர்​பூர் எஸ்​எஸ்பி நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் மேலும் கூறி​யிருப்​ப​தாவது: இந்த போலி வீடியோ மற்​றும் ஆடியோக்​கள் சமூக ஊடகங்​களில் பரவுவ​தாக ஜனவரி 2-ம் தேதி எங்​களுக்கு புகார் வந்​தது. மக்​களை தவறாக வழிநடத்​தும் வகை​யிலும், உயர்​ப​தவி வகிப்​பவர்​களின் கண்​ணி​யம், மதிப்பு மற்​றும் நம்​பகத்​தன்​மைக்கு தீங்கு விளைவிக்​கும் வகை​யிலும் அவை இருந்​தன. மேலும் ஜனநாயக அமைப்​பு​கள் மீது அவநம்​பிக்​கையை ஏற்​படுத்​து​வது, சமூக நல்​லிணக்​கம் மற்​றும் சட்​டம் ஒழுங்கை சீர்​குலைப்​பது அதன் நோக்​க​மாக தெரிந்​தது.

இதையடுத்து சைபர் குற்​றப் பிரி​வின் சிறப்பு புல​னாய்வு குழு மேற்​கொண்ட விசா​ரணை​யில் பிரமோத் குமார் ராஜ் கைது செய்​யப்​பட்​டார். அவரது செல்​போன் பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ளது. முசாபர்​பூர் சைபர் காவல் நிலை​யத்​தில் வழக்​குப் பதிவு செய்​யப்​பட்டு வி​சா​ரணை நடக்கிறது. இவ்​வாறு எஸ்​எஸ்​பி கூறி​யுள்​ளார்​.

SCROLL FOR NEXT