இந்தியா

எல்பிஜி தட்டுப்பாட்டால் பிஎன்ஜிக்கு மாறும் மக்கள்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: அமெரிக்கா, ஈரான் போர் காரண மாக நாடு முழுவதும் வணிக, வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்​டர்​களுக்கு தட்​டுப்​பாடு நில​வு​கிறது. இந்தப் பிரச்​சினைக்கு தீர்வு காண குழாய் வழி காஸுக்கு (பிஎன்ஜி) மாற வேண்​டும் என்று மத்​திய அரசு அண்​மை​யில் அழைப்பு விடுத்​தது.

தமிழகம், மகா​ராஷ்டி​ரா​, டெல்​லி​, உத்தர பிரதேசம், ஹரி​யா​னா​ உள்​ளிட்ட மாநிலங்களின் பல்வேறு நகரங்​களில் பிஎன்ஜி காஸுக்​கான குழாய்​கள் பதிக்​கப்​பட்டு உள்​ளன. எல்​பிஜி சமையல் காஸ் சிலிண்​டர்​களுக்கு தட்​டுப்​பாடு நில​வுவ​தால் இந்த நகரங்​களில் குழாய் வழி பிஎன்ஜி காஸுக்கு பொது​மக்​கள் அதிக எண்​ணிக்​கை​யில் மாறி வரு​கின்​றனர்.

          

கச்சா எண்​ணெயை சுத்​தி​கரிக்​கும்​போது எல்​பிஜி சமையல் காஸ் கிடைக்​கிறது. இது புரோப்​பேன், பியூட்​டேன் வாயுக்​களின் கலவை ஆகும். இதற்கு மணம் கிடை​யாது. ஆனால் எல்​பிஜி கசிவை கண்​டறிய ஈத்​தைல் மெர்​கேப்​டன் என்ற வேதிப்​பொருள் சேர்க்​கப்​படு​கிறது. இதன்​மூலமே எல்​பிஜி காஸ் கசிவை கண்​டறிய முடிகிறது.

பிஎன்ஜி காஸ் என்​பது இயற்கை எரி​வாயு ஆகும். பெரும்​பாலும் மீத்​தேன் எரி​வாயு ஆகும். நிலத்​தடி​யில் உள்ள இயற்கை எரி​வாயு கிணறுகளில் இருந்து மீத்​தேன் பிரித்​தெடுக்​கப்​பட்​டு, சுத்​தி​கரிக்​கப்​பட்டு குழாய் மூலம் வீடு​கள், ஆலைகளுக்கு விநி​யோகம் செய்​யப்​பட்டு வரு​கிறது. தற்​போது சுமார் 50% பிஎன்ஜி காஸ் உள்​நாட்​டிலேயே உற்​பத்தி செய்​யப்​படு​கிறது.

இதுகுறித்து பொதுத்​துறை எண்​ணெய் நிறு​வன​மான இந்​தி​யன் ஆயில் நேற்று வெளி​யிட்ட அறி​விப்​பில், “https://mypngd.in/ என்ற இணை​யதளத்​தில் நுழைந்து உங்​களது மொபைல் போன் எண் அல்​லது எல்​பிஜி இணைப்பு எண்ணை பதிவு செய்ய வேண்​டும். பின்​னர் சரண்​டர் செய்​வதற்​கான விருப்​பத்தை சமர்ப்​பிக்க வேண்​டும். உங்​கள் வீட்​டில் இருந்​த​படியே எளி​தாக எல்​பிஜி இணைப்பை துண்​டிக்​கலாம். இதர நடவடிக்​கைகள் அனைத்​தை​யும்​ சம்​பந்​தப்​பட்​ட ஏஜென்​ஸிகளே மேற்​கொள்​ளும்​” என கூறப்பட்டு உள்​ளது.

SCROLL FOR NEXT